Subscribe Us

கடவுச்சீட்டு, வீஸா மற்றும் குடியுரிமை தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ள தொலைபேசி எண்

கடவுச்சீட்டு தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1962 என்ற இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கடவுச் சீட்டு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களம் தெரிவித்துளள்து.

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடவுச்சீட்டு, வீஸா மற்றும் குடியுரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டதாக இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments