(தகவல்: ரா.புவன் மற்றும் அன்சாரி முகம்மது)

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் (இன்று ஞாயிறு இரவு 9.30
மணியளவில்) வாலிபர் ஒருவர் பஸ் மோதி இறந்து விட்டதை ஏற்பட்ட கலவரத்தில், அங்கே இருந்த அனைத்து இந்திய இளைஞர்களும் சேர்ந்து பஸ் மற்றும் போலீஸ் கார், தீயணைப்பு வண்டி அனைத்தையும் தீயிட்டு கொளுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ஒரு போலீஸ் ஸ்டேசன் அடித்து நொருக்கப் பட்டதுடன்... 20 போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில்... பெரிய கலவர பூமியாய் சிங்கப்பூர் இன்று மாறிவிட்டது.
சிங்கப்பூரில் இதுபோன்றதொரு கலவரம் நேர்ந்ததில்லை காலை 7மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது...
என்னதான் விபத்தைக்காரணம் சொன்னாலும், போதைதான் கலவரத்திற்கான மிகப்பெரிய காரணம்... ஏற்கனவே சீனர்கள், டெல்லி கற்பழிப்பு வழக்கைக் காரணம் காட்டி கேலி,கிண்டல் செய்வார்கள், மரியாதையின்றி நடத்துவார்கள்..இனி இதுவும் சேர்ந்துவிட்டது...
மிகக்கொடுமையான விஷயம் என்னவெனில், எத்தனை பேருக்கு வேலைபோகப்போகிறதோ? இனிமேல் வேலைக்காக இந்தியர்களை எடுப்பதை 99% குறைத்துவிடுவார்கள்...
400+ நபர்களின் குடிபோதை, எத்தனையோ லட்சம் குடும்பங்களின் கனவை தகர்த்த இரவாகிப்போனது என்னுடைய கனவையும் சேர்த்து. என குறிப்பிட்டுள்ளார்.

0 Comments