பரீட்சை வினாத்தாள்களை விற்க முயன்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பேராதனையிலுள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான பரீட்சை வினாத்தாள்களையே குறித்த நபர் விற்பனை செய்வதற்கு முயன்றுள்ளார்.
இந்த பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது. கணிதம் மற்றும் பொது அறிவு வினாத்தாள்களையே குறித்த நபர் 20 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் மற்றுமொருவரை தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

0 Comments