Subscribe Us

header ads

பிரான்சில் ஹலால் இறைச்சியை சந்தைப் படுத்தும் சூப்பர்மார்க்கெட்டை தாக்க முயற்சி

(A.J.M மக்தூம்)
பிரான்சின் ரோபியாஹ் என்ற நகரில் அமைந்துள்ள சூப்பர்மார்கெட் ஒன்று இஸ்லாமிய முறைப்படி அறுக்கப் பட்ட இறைச்சி வகைகளை சந்தைப் படுத்தி வருகிறது. இதன் காரணமாக குறித்த சந்தையை இனம் தெரியாத ஆயுதமேந்திய இனவாத கும்பல் ஒன்று முகமூடி அணிந்த நிலையில் தாக்கி, கொள்ளையடிக்க முயட்சித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலையத்திற்குள் நுழைந்த அந்தக் கும்பல், அதன் களஞ்சிய சாலையை திறக்குமாறு வற்புறுத்தி பணிப்பாளரை வற்புறுத்தியுள்ளனர். அதற்கு இனங்காமையினால் அவரை கடுமையாக தாக்கி விட்டு, அவசரமாக தப்பிச் சென்றுள்ளனர்.

கடும் காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பிலும் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments