Subscribe Us

header ads

உறைந்த நிலையில் கரு: 82 வயது மூதாட்டி அவஸ்தை

மூதாட்டி ஒருவரின் வயிற்றில் உறைந்த நிலையில் (கல்லாகிபோன நிலையில்) காணப்பட்ட கருவொன்று சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கொலம்பியாவின், போகொடா நகரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கே இவ்வாறு கரு கட்டி அகற்றப்பட்டுள்ளது.

இவர் கடந்த காலங்களில் வயிற்று வலியினால் மிகவும் அவஸ்த்தைப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இவரை ஸ்கேன் செய்து பார்த்போது இவரது வயிற்றில் கல்லைப்போன்று கருவொன்று உறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இம்மூதாட்டி 40 ஆண்டுக்கு  முன்னர் கருத்தரித்தபோது அந்த கரு கருப்பையில் தங்காமல் வயிற்றுப் பகுதியில் தங்கியதால் அது கல்லாக மாறிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

11000 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு இதுபோன்ற கல்குழந்தைகள் உருவாவது இயற்கைதான் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தை கருத்தரித்த பிறகு கரு பாதிக்கப்பட்டால் இவ்வாறு கருவில் உள்ள குழந்தை கால்சியம் அமில உப்புகளால் பாதிக்கப்பட்டு கல்லாக மாறிவிடுவது மிகவும் அரிதானது என்றும் அதற்கு அறிவியலில் லித்தோபிடியன் என்றும் சொல்லப்படுகிறது.

இதுவரையில் இதுபோன்று 290 சம்பவங்கள் மருத்துவத்துறையில் பதியப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் மேடம் கோலம்பே சாத்ரி என்ற 68 வயது பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு அவர் 1582இல் இறந்த பின் கல்குழந்தை அவருடைய வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது.

அவர் 28 வருடங்களாக வீங்கிய வயிற்றுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்துள்ளார்.

Post a Comment

0 Comments