புத்தளம் - அநுராதபுரம் வீதியின் வில்லுவ பிரதேசத்தில் பொலிஸ்
அதிகாரியினால் செலுத்திச் செல்லப்பட்ட மோட்டார்வண்டியில் மோதுண்டு சிறுவன்
ஒருவர் காயமடைந்துள்ளார்.
மூன்றரை வயதுடைய ஆண் சிறுவன் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த சிறுவன் சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் வண்டியை செலுத்திச் சென்றவர் புத்தளம் பொலிஸில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.

0 Comments