(MN)
அபு தாபியில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான எட்டு நாடுகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பி குழுவுக்கான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 3 விக்கெட்களால் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் வெற்றி இலக்கை 47.3 ஓவர்களில் கடந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹஷான் தமிந்து (61 ஓட்டங்கள்), சதீர சமரவிக்ர (31 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தபோதிலும் அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் சரியத் தொடங்கின. எனினும் மத்திய வரிசை வீரர் பிரியமல் பெரேரா 47 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றார்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ஸியா உர் ரெஹ்மான் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 47.3 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்களால் அபார வெற்றியீட்டியது.
ஆப்கானிஸ்தான் சார்பாக ஷஹிதுல்லாஹ் (47), யூனாஸ் அஹ்மத்ஸாய் (36), முஸ்லிம் மூஸா (29), நஸிர் அஹ்மத்ஸாய் 28 ஆ.இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
இலங்கை பந்துவீச்சில் பிரியமல் பெரேரா 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பங்களாதேஷ் இலகு வெற்றி
இதே குழுவுக்காக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மலேஷியாவை 9 விக்கெட்களால் மிக இலகுவாக பங்களாதேஷ் வெற்றிகொண்டது.
இப் போட்டியில் மலேஷிய 25.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களைப்பெற்றது. பந்துவீச்சில் அபு ஹைதர் 4 கன்னி ஓவர்கள் அடங்கலாக 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பங்களாதேஷ் 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
நேபாளத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
குழு ஏ இற்கான போட்டி ஒன்றில் நேபாளத்தை துபாய் விளையாட்டரங்கில் எதிர்கொண்ட பாகிஸ்தான் 132 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்களைப் பெற்றது. சமி அஸ்லம் 108 ஓட்டங்களையும் ஹசன் ராசா 100 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாவது விக்கட்டில் 166 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். நேபாளம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
181 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியத்தை ஷார்ஜா விளையாட்டரங்கில் குழு ஏ போட்டியில் சந்தித்த இந்தியா 189 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைக் குவித்தது. இதில் அக்கில் ஹேர்வாத்கர் 101 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 65 ஓட்டங்களையும் ரிக்கி பூய் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 40.1 ஓவர்களில் சகல
விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்திய பந்துவீச்சில் தீப்பக் ஹூடா 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார

0 Comments