கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகள் வரலாற்று
முக்கியத்துவ இடங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.இதன் காரணமாக வெளியில்
காத்திருந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழக நான்காம் வருட சித்திரமும் வடிவமைப்பும் துறை
மாணவர்கள் கல்விச்சுற்றுலாவினை மேற்கொண்டு இலங்கையின் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்காக அனுராதபுரத்தில்
அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றுள்ளனர் . இதன்போது
இவர்களுடன் வந்த முஸ்லீம் மாணவிகளை அங்கு காவற்கடமையில் இருந்த அதிகாரிகள்
அனுமதியாது தடுத்துள்ளனர்.
குறித்த இடத்தை பார்ப்பதாயின் முஸ்லீம் மாணவிகள் அணிந்திருந்த முக்காடு, ஹிஜாப் என்பன அகற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக அம்மாணவிகள் ஏனைய மாணவர்கள் போன்று குறித்த இடங்களை
பார்க்க முடியாமல் போனது. என்றாலும் ஏனைய சக மாணவர்களின் வேண்டுகோளின் படி
முஸ்லீம் மாணவிகள் தலையில் அணிந்து வந்த முக்காடு ஹிஜாப் போன்றவற்றை
களைந்ததுடன் சக மாணவர்களுடன் வரலாற்று சிறப்பிடங்களை பார்வையிட்டனர்.
வரலாற்று சிறப்பிடங்களில் அங்கு பாதுகாப்பு கடமையில் உள்ளவர்களால்
செருப்பு, தொப்பி என்பன குறித்த இடங்களை பார்க்க வருபவர்கள் அணிவதை
தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பா.சிகான் -கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ இடங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.இதன் காரணமாக வெளியில் காத்திருந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
- பா.சிகான் -கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ இடங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.இதன் காரணமாக வெளியில் காத்திருந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழக நான்காம் வருட சித்திரமும் வடிவமைப்பும் துறை
மாணவர்கள் கல்விச்சுற்றுலாவினை மேற்கொண்டு இலங்கையின் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்காக அனுராதபுரத்தில்
அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றுள்ளனர் . இதன்போது
இவர்களுடன் வந்த முஸ்லீம் மாணவிகளை அங்கு காவற்கடமையில் இருந்த அதிகாரிகள்
அனுமதியாது தடுத்துள்ளனர்.
குறித்த இடத்தை பார்ப்பதாயின் முஸ்லீம் மாணவிகள் அணிந்திருந்த
முக்காடு, ஹிஜாப் என்பன அகற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

0 Comments