Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று டிசெம்பர் 17

1398 : சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து தைமூர் படைகள் தோற்கடித்தன.

1577 : பிரித்தானிய அரசி முதலாம் எலிஸபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்ஸிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.

1718 : ஸ்பெயினுக்கு எதிராக பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது.

1819 : சிமோன் பொலிவர்  கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தார்.

1834 : அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, டென்னஸி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1903 : ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் வான்கலத்தில் பறந்தனர்.

1907: பூட்டானின் முதலாவது மன்னராக உகியென் வங்க்சுக் முடிசூட்டப்பட்டார்.

1926 : லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து ஜனநாயக அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.

1961 : கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

1967 : அவுஸ்திரேலியப் பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் போர்ட் கடலில் நீந்தும்போது காணாமல் மர்மாக போனார். பின்னர் இவர் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

1970 : போலந்தில் கிதினியா நகரில் ரயிலில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதால் பலர் கொல்லப்பட்டனர்.

1973 : ரோம் நகர விமான நிலையத்தை  தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.

1983 : லண்டனில் பல்பொருள் சந்தையில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

1986: போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் ஊடகவியலாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1989 : 25 ஆண்டுகளின் பின்னர் பிரேஸிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

2009: லெபனானுக்கு அருகில் கப்பலொன்று மூழ்கியதால் 44 பேர் பலியாகினர்.
தோற்கடித்தன.

Post a Comment

0 Comments