1360 : பிரெஞ்சு நாணயமான பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
1492 : கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை (தற்போதைய ஹெ;ட்டி, டொமினிக்கன் குடியரசு) அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
1497 : போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
1746 : ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1831: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் குயின்ஸி அடம்ஸ், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தபின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த வர் இவர் மாத்திரமே.
1848 : கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1896 : சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
1936 : சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போரில் பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1941 : ஜெர்மனிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் மொஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
1957 : இந்தோனேஷியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

1958 : எஸ்.டி.டி. தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 : அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
1969 : வியட்னாமின் மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1978 : சோவியத் ஒன்றியம், ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 : ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 : இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
2003 : தெற்கு ரஷ்யாவில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
2003 : இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2006 : பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006 : இந்திய மத்திய அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன், 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
0 Comments