கடலில் விபத்துக்குள்ளாகுபவர்களைக் காப்பாற்றுவதற்காக, பறக்கும் ரோபோக்களை உயிர்காப்பு வீரர்களுக்குப் பதிலாக பயன்படுத்துவற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.


ஈரானைத் தளமாகக் கொண்ட ஆர்.ரி.எஸ். லேப் எனும் நிறுவனம் இத்தகைய பறக்கும் ரோபோவை கண்டுபிடித்துள்ளது.

கடலுக்கு மேலாக இந்த ரோபோக்கள் நீண்ட தூரம் பறக்கக்கூடியவையாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

'பார்ஸ்' எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோ மின்கல (பற்றரி) சக்தியினால் இயங்கும்.  கஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ ஆய்வாளர்களால் பரீட்சிக்கப்பட்டுள்ளது.  கஸ்பியன் கடல்பகுதியில் அண்மைக்காலத்தில் பல விபத்துக்கள் ஏற்பட்டதால் இந்த ரோபோவை பரீட்சிப்பதற்கு இக்கடல்பகுதி தெரிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.