புத்தளத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்களை
கௌரவப்படுத்தும் ஒரு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை அல்-ஹனா பெண்கள் நலன்புரி
நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட நமது ஆசிரியர்கள்
அனைவரும் வீணாக நேரத்தை செலவிடாமல் அதற்கு மாற்றமாக நமது புத்தள
சமுகத்தில் இருக்கும் கல்வி சம்பந்தமான பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான
தீர்வுகளை ஒரு அழகான கலந்துரையாடலுடன் பெற்றுத்தந்தது மட்டுமல்லாது அந்த
முடிவுகளுக்கு முன் நின்று ஒரு silent volunteer ஆக உழைக்கவும்
உறுதியளித்தார்கள்.
silent volunteers என்ற குழுவின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த நிகழ்வு fruit salad எனும் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் அடைவுகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை புதிய சமூகத்துக்கும் வெளிக்காட்டுவது, இவர்களின் மூலம் பெறப்படும் ஒரு நிமிட ஆலோசனைகளை படம்பிடித்து அதனை புதிய ஆசிரியர்களுக்கு "electronic advice" என்ற ஆலோசனை மார்க்கத்தை உருவாக்குவதும், பேனையோடும் பிரம்போடும் வகுப்பறையிலும் பார்த்துவந்த மாணவர்களுக்கு இந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கத்தியோடும் பழத்தோடும் இருக்கும் காட்சியை கொடுப்பதுமே ஆகும். மிக விரைவில் அந்த electronic advice நமது பக்கத்தில் பிரசுரமாகும்.

0 Comments