
வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின்
தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்.
பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.11.13) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது வடமாகாண முஸ்;லிம்; மக்களின் மீள்குடியேற்றம்
தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என யாழ். மாவட்ட முஸ்லிம்
பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட போது,
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள்
தொடர்பில் ஆணைக்குழுவொன்றை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்;களின்
பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர்
கூறியுள்ளார்.
இவ்வாறு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்பாளர்கள் 5 பேர் கடமையாற்றுவார்கள்;
என்பதுடன், அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்படும்
எனவும் உறுதியளித்துள்ளார்.
0 Comments