Subscribe Us

header ads

நபிகளார் அணிந்த மேலாடை : துருக்கியில் கண்காட்சி

அண்ணல் நபிகளார் ( ஸல்லல்லாஹு அலைஹிவசல்லிம்) அவர்கள் அணிந்த மேலாடை துருக்கியின் தலை நகரான இஸ்தான்புல் ஹெர்கா அல் ஷரீப் பள்ளிவாசலில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் மக்கள் பார்வை ஏற்பாடு செய்து வரப்படுகின்ற அதேவேளை , கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இவ்வருட நிகழ்வில் உரையாற்றிய முப்தி முஸ்தபா ககிரிசி அவர்கள் குறிப்பிடுகையில், குறித்த ஆடைக்கு வரலாற்று முக்கியத்துவம் இருப்பது தவிர்க்க முடியாதது.
ஆனாலும் யாரும் இந்த ஆடையை பெரிதாக பார்க்க வேண்டாம் அண்ணல் நபிகளாரை எமக்கு அருளிய இறைவனின் அருட்கொடையை நினைவு கூறுங்கள் என கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆடை, உவைஸ் அல் கராணி எனும் சஹாபிக்கு அண்ணல் நபிகளார் பரிசாக தந்ததாக கூறப்படும் அதேவேளை அன்னாரின் உறவினர்களால் பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கப்பட்டும் வருகிறது. 
1611ம் ஆண்டு குறித்த ஆடை ஒட்டமான் சுல்தான் அப்துல் ஹமீதினால் இஸ்தான்புல்லுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments