Subscribe Us

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம்: இந்தியாவின் பலமா? பலவீனமா?

(Amanullah Arshath)
உலக அரங்கில் பிரமிப்பை ஏற்­ப­டுத்தி எதிர்­பார்ப்­புகள் பல­வற்றைச் சுமந்து கடந்த 5ஆம்
 
திகதி இந்­தி­யாவின் பெரு­மை­களை மங்­க­ள­மாக வானு­யர்த்திச் சென்­றது அந்­நாட்டின் மங்­கள்யான் விண்­கலம்.
உலக நாடு­களில் ரஷ்யா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய விண்­வெளி அமைப்பு ஆகி­யன மட்­டுமே இது­வ­ரையில் செவ்வாய் கிர­கத்­துக்கு விண்­க­லத்­தினை வெற்­றி­க­ர­மாக செலுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில் இப்­பெ­ரு­மையை உலகில் 4ஆவது நாடா­கவும் ஆசி­யாவில் முதல் நாடா­கவும்  இந்­தியா பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.
 
இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வனம் (இஸ்ரோ) சார்பில் 450 கோடி இந்­திய ரூபா செலவில் "மார்ஸ் ஓபிடெர் மிஷன்' திட்­டத்தின் கீழ் இந்த மங்­கள்யான் ஏவப்­பட்­டுள்­ளது. இது உலகில் மிகக்­கு­றைந்த செலவில் உரு­வான செய்­மதித் திட்­ட­மாகும்.
 
மங்­கள்யான் விண்­கலம் இந்­தி­யாவின் ஆந்­திரப் பிர­தே­சத்­தி­லுள்ள
ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வி­லுள்ள சதிஷ் தவான் விண்­வெளி  நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி- 25 ரொக்கெட் மூலம் வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­டது.
 
சுமார் 1500 கிலோ கிராம் நிறை­யுடை விண்­க­லத்தை சுமந்து செல்லும் ஆற்­றல்­மிக்க இந்த ரொக்­கெட்­டினால் சுமார் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் செவ்­வாயை நோக்கி விண்­க­லத்­தினை செலுத்தும் ஆற்றல் அற்­றது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

மங்­க­ள­மாக அமைந்த மங்­கள்­யானின் பயணம்

எனவே பூமியைச் சுற்றி படிப்­ப­டி­யாக வேகத்தை அதி­க­ரிக்க செய்து வெவ்வேறு ஓபி­டெல்­களை அடைந்து வேகம் அதி­க­ரிக்­கப்­பட்ட செவ்­வாயை நோக்கிச் செலுத்­தப்­படும். அதா­வது ஊசல் வேகத்தை அதி­க­ரிப்­பது போல. இன்னும் தெளி­வாகச் சொல்­ல­வேண்­டு­மானால் ஊஞ்­சலின் வேகத்தை எவ்­வாறு அதி­க­ரிக்­கி­றோமோ அதே பாணியில் இந்த ரொக்கெட் தனது வேகத்தை அதி­க­ரித்­துக்­கொள்ளும்.












இதே முறை­யிலே 2008ஆம் ஆண்டு சந்­தி­ராயன் விண்­க­லத்­தினை இந்­தியா
செலுத்­தி­யி­ருந்­தது. இது அமெ­ரிக்கக் கணித நிபு­ண­ரான பெல் புரூனோ என்பர்
உரு­வாக்­கிய முறை­மை­யாகும்.  சந்­தி­ர­னுக்கு அல்­லது செவ்­வாய்க்கு ஆளில்­லாத விண்­க­லத்தை அனுப்­பு­வ­தற்கு மட்­டுமே  இந்த முறை பொருத்­த­மாகும்.

கட்­டக்­கட்­ட­மாக வேகத்தை அதி­க­ரிக்கும் திட்­டத்தில் இஸ்ரோ சற்று பின்­ன­டைவை எதிர்­நோக்­கி­யது. காரணம் சீராக ஓபிடெல் நீள்­வட்­டப்­பா­தையை அதி­க­ரித்து 78,722 கி.மீ தூரத்தில் நிறுத்­தப்­பட்­டது. அப்­போது எஞ்­சினில்  சிறிய கோளாறு ஏற்­பட்­டது.

பின்னர் இதனை 5 முறை முயற்­சித்து சரி­செய்து 118,642 கி.மீ தூரத்­திற்கு
நகர்த்­தி­யுள்­ள­தாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் ஆர். ராதா­கி­ரு­ஷ்ணன் பேட்­டி­யொன்றில் தெரி­வித்­தி­ருந்தார். தற்­போது முழு­மை­யான கட்­டுப்­பாட்டில் பாது­காப்­பாக உள்­ளது. டிசம்பர் மாதம் 1ஆம் திகதி மங்­கள்யான் செவ்வாய் கிர­கத்­துக்­கான பாதையில் தனது பய­ணத்தை ஆரம்­பிக்கும் எனக் குறிப்­பிட்டார்.

ரஷ்யா, அமெ­ரிக்கா ஏவும் ஏவு­க­ணைகள் ஓரிரு சுற்­றி­லேயே செவ்­வாயை நோக்கி பய­ண­மா­கி­விடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

11 மாதங்கள் பயணம் மேற்­கொண்டு செவ்வாய் செல்லும் மங்­கள்யான்,
தரை­யி­றக்­கப்­ப­ட­மாட்டாது. செவ்வாய் ஆராய்ச்­சியில் அதி­க­பட்­ச­மாக செயற்­படும் விண்­க­லம் அமெரிக்காவின் கியூரியோசிட்டி  ஆகும்.


செவ்வாய் கிர­கத்தில் உயி­ரி­னங்கள், வளி­மண்­டலம் மற்றும் கனிம வளங்கள் ஆகி­ய­வற்றை ஆராய்­வ­தற்­கா­கவே மங்­கள்யான் புறப்­பட்­டுள்­ளது. இப்­ப­யணம் வெற்­றி­பெற்றால் இந்­தியா விண்­வெளி ஆராய்ச்­சியில் தலை ­நி­மிர்ந்து நிற்கும்.

கீரைக்­க­டைக்கு எதிர்க்­க­டையா?சாதக பாதக விமர்­ச­னங்கள்

ஆனால் இந்­தி­யாவில் சுகா­தாரம், உள்­நாட்டு பிரச்­சி­னைகள், பொரு­ளா­தாரம் என ஏரா­ள­மான பிரச்­சி­னைகள் உள்­ளன. இவற்­றுக்­கி­டையில் பல்­வேறு
பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் விண்­வெளி ஆய்வு நட­வ­டிக்­கைகள் இந்­தி­யா­வுக்கு அவ­சி­யமா என மேற்­கு­லக விமர்­ச­கர்கள் தகவல் வெளி­யிட அவர்களின் அடி­பொ­டி­களும் இதனை பின்­தொ­டர ஆரம்­பித்­துள்ளனர்.

செவ்வாய் கிரக ஆராய்ச்­சியில் இது­வொரு பாட­வி­தான செயற்­பாடு எனவும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

விண்­வெளி ஆய்­வு­களின் முன்­னோ­டி­யான ரஷ்­யா­வினை எதிர்த்து அர­சியல்
நோக்­கத்­திற்­கா­கவே அமெ­ரிக்க விண­வெளி ஆய்­வினை ஆரம்­பித்­தது.
1957ஆம் ஆண்டு முதல் விண்­வெளி ஆய்­வு­களில் சாதனை படைக்க ஆரம்­பித்த ரஷ்­யாவை பின்­தள்ள வேண்டும் என்ற போட்­டி­யி­லேயே 1961ஆம் ஆண்டு ஜோன் எப். கென்­னடி "மனி­தனை சந்­தி­ர­னுக்கு அனுப்­புவோம்' என சூளு­ரைத்தார்.

பின்னர் 1969ஆம் ஆண்டில் அதனை சாதித்த அமெ­ரிக்கா விண்­வெளி ஆய்வில் இன்று பல்­வேறு பிரச்­சி­னை­களால் துவண்­டு­கி­டக்கும் ரஷ்­யாவை பல படி முன்­னே­றி­யுள்­ளது.

இது­போன்றே செவ்வாய் ஆராய்ச்­சியில் தோல்­வி­யுற்­றுள்ள ஆசிய நாடு­க­ளான ஜப்பான் மற்றும் சீனாவை தோற்­க­டித்து ஆசி­யாவில் பலம்­பெறும் இந்­தி­யாவின் அர­சியல் போட்­டியே இந்த மங்­கள்­யானும் விண்­வெளி ஆய்­வு­களும். இப்­போட்டி ஆரோக்­கி­ய­மா­னது. அது மனித குலத்தின் பாரிய வளர்ச்­சிக்கு வித்­திடும் என மற்­று­மொரு சாரார் இந்­தி­யா­வுக்கு ஆத­ரிக்­கவும் தவ­ற­வில்லை.

ஜப்பான் 2003ஆம் ஆண்டும் சீனா 2011ஆம் ஆண்டும் செவ்­வாய்க்கு விண்­க­லத்­தினை செலுத்­தி­யது. ஆனால் இலக்கை அடை­யாது அத்­திட்டம் அந்­நா­டு­க­ளுக்கு தோல்­வி­யை தந்தது

வினைத்­தி­றன்­மிக்க இந்­திய ஆய்­வுகள்

இதே­வேளை, ஆற்றல் குறைந்­த­தா­கவும் இருந்­தாலும் வினைத்­திறன் மிக்­க­தாக ரொக்கெட்டுகளை வடிவமைத்துள்ள இஸ்ரோ அமைப்பு, ரொக்கெட் விடயத்தில் பல மடங்கு பின்னிடைவில் இந்தியா இருந்தாலும் 1993ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் ஒரு முறையே இஸ்ரோ ரொக்கெட் ஏவுதலில் தோல்வி கண்டுள்ளது.

செலவு குறைந்த விண்­வெளித் திட்­டங்­க­ளையும் இந்­தியா முன்­னெ­டுக்­கின்­றது. தொடர்ந்து பல விண்­வெளித் திட்­டங்­க­ளையும் செயற்­ப­டுத்த காத்­தி­ருக்­கி­றது.

இந்­நி­லையில் சவால்­களைச் சுமந்து சென்­றுள்ள மங்­கள்யான் பலமா? அல்­லது பல­வீ­னமா? என இந்­தியா மட்­டு­மல்ல விண்­வெளி ஆர்­வ­லர்­க­ளுடன் உல­கமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.   

Post a Comment

0 Comments