புதிய மாலைதீவு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அப்துல்லா யாமின்
அப்துல் கையூமிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய மாலைதீவு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"மாலைதீவு மக்கள் உங்கள் கொள்கைகள் மீதும் உங்கள் தலைமைத்துவத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது. 1960ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் நிலவுகின்றன.
அன்று முதல் இரு நாடுகளும் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றன. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகள் நட்புறவின் பாரம்பரியத்தையும் நெருங்கிய கூட்டுறவையும் பரஸ்பர கௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
மாலைதீவு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு தனது ஒத்துழைப்பையும் கூட்டொருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இலங்கையும் மாலைதீவும் வலுவான வர்த்தக உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன.
இலங்கையுடனான குறிப்பிடத்தக்க ஏற்றுமதி இறக்குமதிகளில் குறிப்பாக மாசி ஏற்றுமதிசெய்யப்படுவதும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்".
இலங்கையுடனான குறிப்பிடத்தக்க ஏற்றுமதி இறக்குமதிகளில் குறிப்பாக மாசி ஏற்றுமதிசெய்யப்படுவதும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்".

0 Comments