Subscribe Us

header ads

ஞானசார தேரருக்கு ஐ.தே.க. ஆதரவாளர்கள் பாடம் கற்பித்து விட்டனர்-முஜிபுர் ரஹ்மான்

இலங்கையில் மனித உரிமைகள் இல்லையென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரூபித்துவிட்டார். அரசாங்கம் பெளத்த அமைப்புகளின் மூலம் சிறுபான்மை மக்களை அடக்குவதைப்போல் இன்று எதிர்க்கட்சியையே அடக்க முயற்சிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிறந்ததொரு பாடத்தினை கற்பித்து விட்டனர். எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்க அமைப்புகளுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் இராணுவ ஆட்சிமுறையே இடம்பெறுகின்றது . இங்கு மனித உரிமைகள் இல்லையென்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நிரூபித்து விட்டது.

சட்ட ரீதியான பலவிடையங்கள் இலங்கையில் இடம்பெறுகின்றது. சூதாட்டங்களும், போதைப்பொருள் வியாபாரங்களும் பரப்பப்படுகின்றன. ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் சூதாட்டத்தினைப் பரப்ப வருகின்றார். இவற்றிற்கெல்லா ம் குரல் கொடுக்காத பொதுபலசேனா அமைப்பினர் இன்று நாம் மனித உரிமைகள் பற்றி பேசும்போது ஆர்ப்பாட்டங்களை செய்கின்றனர்.

கலகொட அத்தே ஞானசார தேரரர் அரசாங்கத்தின் கையாளென்பதனை இம்முறையும் நிரூபித்து விட்டார். ஜனாதிபதி மஹிந்தவின் பேச்சிற்கு ஏற்பவே இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அப்பாவி முஸ்லிம், தமிழ் மக்களை அரசாங்கம் அடக்கி அவர்களின் மனித உரிமைகளை பறித்துள்ளதைப்போல் இன்று அரசாங்கத்தினை எதிர்க்கும் சிங்களக் கட்சிகளையும் அடக்கி இராணுவ ஆட்சியினை நடத்த நினைக்கின்றனர்.

மேலும் பொதுபல சேனா பெளத்த அமைப்பினர் எல்லா இடங்களிலும் தலை நுழைப்பதைப்போல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் செயற்படலாம் என நினைத்து வந்துவிட்டனர். அரசாங்கத்தைப் போன்றதல்ல ஐக்கிய தேசியக்கட்சி எம்முடன் மோதினால் சரியான பாடத்தினை கற்பிப்போம் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நிரூபித்து விட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
 (vidiveli)

 

Post a Comment

0 Comments