(A.J.M மக்தூம் )மனித சமூகத்தில் ஒரு சாரார் நாம் சமாதானம் மேலோங்க பாடுபடுகிறோம்,
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (அல் குர்ஆன் 2:11,12)
குழப்பம் செய்தல், நாசம் விளைவித்தல் மற்றும் சீர்த்திருத்தம், சமாதானம் போன்ற செயற்பாடுகளில் மனிதர்களின் பார்வை வித்தியாசமானதாக இருப்பதை அவதானிக்கின்றோம். முரண்பாடுகளுடைய அவர்களின் புரிதலை அடிப்படையாக வைத்து குழப்பம் மற்றும் சீர்த்திருத்தம் போன்றவற்றுக்கு அவர்கள் இடும் வரையறைகளும் முரண்பட்டதாகவே அமைந்து விடுகிறது.
இது இறைவனின் போதனைகளை பொருட்படுத்தாது மனோ இச்சைக்கும், மனித புத்திக்கும் முழுமையாக கட்டுப் பட்டு அது நல்லதென கருதுவதை நல்லதென்றும், அது தீயதாக கருதுவதை தீமையாக எண்ணுவதுமே இதற்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது.
இதன் விளைவால்தான் அடிப்படைகள் அற்ற பல்வேறு கருத்துக்கள் உருவாகி சமூகத்தில் முரண்பாடுகள், பிணக்குகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமாதானம் சீர்குலைந்து போய்விடுகிறது.
எனவேதான் இஸ்லாம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக குழப்பம் மற்றும் சமாதானம், நாசம் மற்றும் சீர்த்திருத்தம், தீயது மற்றும் நல்லது, ஹராம் மற்றும் ஹலால் போன்றவற்றை பிரித்தறிவிக்கும் பொறுப்பை முழுமையாக தனது கையில் வைத்துள்ளது. அதில் மனித புத்திக்கு எந்த வகையிலும் இடம் கிடையாது. இதன் மூலம் இஸ்லாத்தில் குறித்த பிரச்சனைக்கான வாயில் முழுமையாக மூடப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மனித சமூகத்தில் தோன்றும் எந்த விதமான முரண்பாடுகளாக இருந்தாலும் அவை சமூக பிரிவினைக்கு வழிகோல முன் அல் குர்ஆன், சுன்னாவுடன் அவற்றை அலசி அதில் சரி எது? பிழை எது? என்பதை புரிந்து கொண்டு சமூக கட்டமைப்பையும், சமாதானத்தையும் பாதுகாப்பதன் அவசியத்தை அல் குர்ஆன் பின் வருமாறு எடுத்துரைக்கிறது.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும்
(அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின்
- அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

(அல் குர்ஆன் 4:59)
அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மார்கத்தை புறக்கணித்து வாழ்பவர்களே குழப்பத்தை சமாதானமாகவும், ஹராத்தை ஹலாலாகவும், தீயதை நல்லதாகவும் கருதி செயற்படுகின்றனர். இது இவ்வாரிருக்க முஸ்லிம் சமூகத்தில் ஒரு கூட்டம் அன்று தொட்டு இன்று வரை அல்லாஹ்வின் மார்கத்தோடு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத அவர்களின் கருத்துக்களையும், கட்டுக் கதைகளையும் பரப்பி வருகின்றனர். இவர்களே முஸ்லிம் பெயர் தாங்கிகளாக சமூகத்தில் வளம் வரும் நயவஞ்சகர் கூட்டம். அல் குர்ஆன் பல இடங்களின் இவர்களின் முகத்திரையை கிழித்து இவர்களின் உண்மை முகத்தை தெளிவு படுத்தத் தவறவில்லை.
எனவே அல் குர்ஆன் மற்றும் சுன்னாவோடு இவர்களின் நிலைகளை அலசிப் பார்த்தால் இவர்களின் உண்மை முகத்தை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். இவர்களின் மூலம் ஏற்படும் ஆபத்து மிகவும் பாரதூரமானது என்பதை புரிந்து கொண்டு கருமமாற்றுவது அவசியமாகும். நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும்? அவர்களின் குணாதிசியங்கள் எவ்வாறு அமைந்திருக்கும்? என்பதையெல்லாம் அல் குர்ஆன் மற்றும் சுன்னாவில் வெட்ட வெளிச்சமாக காணலாம்.
குழப்ப வாதிகள் எப்போதும் முற்றுப் பெறுவதில்லை; அவர்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்களே, அதிலும் அவர்கள் தாம் சீர்திருத்த வாதிகள் என நம்பிக்கொண்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேலும் ஆபத்தானதாக அமைந்து விடுகிறது.

இவை எல்லாவற்றை விடவும் உண்மையான சீர்திருத்த வாதிகள் தமது பங்களிப்பை செய்யாது செயலிழந்து நிற்பது மென்மேலும் ஆபத்தானதாக அமைந்து விடும்.
அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.)
ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக
இருக்கிறான். (அல் குர்ஆன் 2:251)

0 Comments