மறைந்த முன்னாள் பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத் படுகொலை குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை கண்டறிய சர்வதேச விசாரணை அவசியம் என தற்போதைய பலஸ்தீன் அதிபர் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத், அனலியம் மூலப்பொருள் மூலம் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என அன்மையில் அவரின் உடலை தோண்டி எடுத்து நடாத்தப் பட்ட மருத்துவ பரிசோதனைகள் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
இஸ்ரேல் தான் இந்த படுகொலையை செய்திருக்கலாம் என தடவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டிருந்த போதிலும், இஸ்ரேலை நேரடியாக குற்றஞ்சாட்டுவதை அப்பாஸ் தவிர்த்து கொண்டுள்ளார்.
எனது கணவர் (யாசர் அராபத்) இயற்கை மரணத்தால் உயிர் இழக்கவில்லை. அவர் போலோனியம் என்ற விஷத்தால் கொல்லப்பட்டுள்ளார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவரது மரணம் இயற்கையானது அல்ல. அரசியல் படுகொலை தான் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. என யாசர் அராபத்தின் மனைவி சுஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

0 Comments