காணலின்போது முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்துக்கள் முழு இலங்கையர்களும் இணைந்து முரளியை கௌரவளிக்க வேண்டும்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கொடுக்கும் கௌரவம் போன்று சமமானதொரு கௌரவத்தை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கும் மக்கள் இன்று கொடுக்கின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் திசாநாயக்கவத்தை வருட தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தினை 153 இலட்சம் ரூபா öசலவில் நவீனமயப்படுத்தல் திட்டத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போ@த அமைச்சசர் விமல் வீரவன்ச @மற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும் கலந்து சிறப்பித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் விமல் தெரிவித்ததாவது;
இந்த நாட்டின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரும், நற்குணமுள்ள இலங்கையின் ஒரு öசாத்தாகவும் எமது பௌத்த இனத்தின் தமிழ் சகோதரப் பிரஜையாகவும் முத்தையா முரளிதரனை நாம் நோக்குகின்@றாம்.
இந்தநாட்டிலுள்ள கலைஞர்களில் பெரும்பாலா@னார் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் சிங்கள மொழி மூலமேதமது படைப்புக்களை படைக்கின்றனர். அவர்கள் இந்நாட்டில் உள்ள சிங்கள மொழி தெரிந்த மக்கள் மத்தியிலேயேதான் பிரபல்யம் அடைகின்றனர்.
ஆனால் விளையாட்டு வீரர்களது திறமைகள் முழு உலகுக்கும் ஒரு மொழியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அவர்கள் பெயர்கள் முழு உலகுக்குமேபிரபல்யப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் முத்தையா முரளிதரன் இந்த நாட்டின் சிறந்ததொரு பிரஜை. அவரது கருத்துக்களை அவர் சர்வதேச ஊடகங்கள் ஊடாகச் செல்லும்போது இந்த நாட்டின் யதார்த்தத்தை உலக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். இதற்காக இந்த நாட்டில் வாழும் மக்கள் முத்தையா முரளிதரன் போன்றோரை கௌரவப்பத்தவேண்டும் என்றார்.


0 Comments