Subscribe Us

header ads

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பிரதான பெண் பாடசாலை ஒன்றில் 7ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 
 
குறிப்பிட்ட மாணவி அட்டன் டிக்கோயா ஊல்பேங்க் பிரிவில் வசிக்கும் தோட்ட தொழிலாளியின் மகளாவார். நேற்று இரவு 6 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். 
 
சிறுமியின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் இருந்து இன்று நாவலப்பிட்டி உயர் வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments