Subscribe Us

header ads

வரலாற்றி்ல் இன்று நவம்பர் 18


1993:தென்­னா­பி­ரிக்­காவில் கறுப்­பினத் தவர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை
 
1421 : நெதர்­லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பர­வி­யதில் 10,000 பேர் வரையில் உயி­ரி­ழந்­தனர்.


1477 : இங்­கி­லாந்தில் அச்­சி­யந்­தி­ர­சாலை யில் அச்­சி­டப்­பட்ட முத­லா­வது நூலான
'Dictes or Sayengis of the Philosophres' வில்­லியம் கக்ஸ்டன் என்­ப­வரால்
வெளி­யி­டப்­ப­ட்டது.


1493 : கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்­கோவை முதன்­மு­றை­யாகக் கண்­ணுற்றார்.


1626 : புனித பீட்டர் பசி­லிக்கா தேவா­லயம் ரோம் நகரில் திறந்து வைக்­கப்­பட்­டது.


1803 : ஹெயிட்டி புரட்­சியின் கடைசிப் பெரும் போர் இடம்­பெற்­றது. இது ஹெயிட்டி குடி­ய­ரசு என்ற மேற்கு அரைக்­கோ­ளத்தின் முத­லா­வது கறுப்­பினக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட வழி­ வ­குத்­தது.


1863: டென்­மார்க்கின் ஒன்­பதாம் கிறிஸ்­டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென் மார்க்­குக்குச் சொந்தம் என அறி­விக்கும் சட்­ட­மூ­லத்­துக்கு ஒப்­ப­மிட்டார். இது



1864 இல் ஜேர்­மன்-­டென்மார்க் போர் ஏற்­பட வழி­வ­குத்­தது.


1883 : கன­டாவும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஒரே நேர எல்­லை­களை வகுத்துக் கொண்­டன.


1903 : பனாமா கால்­வாய்க்கு தனிப்­பட்ட உரி­மையை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு வழங்கும் உடன்­பாடு பனா­மா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.


1909 : நிக்­க­ரா­கு­வாவில் இரண்டு அமெ­ரிக்­கர்கள் உட்­பட 500 புரட்­சி­யா­ளர்கள்
அர­சுப்­ப­டை­யினால் கொல்­லப்­பட்­டதை அடுத்து ஐக்­கிய அமெ­ரிக்கா இரண்டு
போர்க்­கப்­பல்­களை அந்­நாட்­டுக்கு அனுப்­பி­யது.


1926 : ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்­கப்­பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். நோபல் பரிசு ஸ்தாபகர் அல்­பிரட் நோபல், டைன­மைட்டை கண்­டு­பி­டித்­தவர் என்­பதே இதற்குக் காரணம்.


1929 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் இடம்­பெற்ற 7.2 ரிச்டர் பூகம்பம் மற்றும்
சுனாமி கார­ண­மாகப் பலத்த சேதம் ஏற்­பட்­டது. 28 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1943: இரண்டாம் உல­கப்போர்: பிரித்­தா­னியப் படைகள் பேர்லின் நகரில் குண்­டு­களை வீசி­யதில் 131 பேர் கொல்­லப்­பட்­டனர். இச்­ச­மரில் 9 பிரித்­தா­னிய வான்­க­லங்கள் அழிக்கப் பட்­டன.


1943 : உக்­ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த 6,000 யூதர்கள், நாசிப்­ப­டை­க­ளினால் கொல்­லப்­பட்­டனர்.


1947 : நியூ­ஸி­லாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்­த­கத்­தொ­குதி ஒன்றில் இடம்­பெற்ற தீயில் 41 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1963: இலக்­கங்­களை சுழற்­று­வ­தற்குப் பதி­லாக அழுத்தி செயற்­ப­ட­வைக்கும்
தொலை­பேசி பாவ­னைக்கு வந்­தது.


1978 : கயா­னாவில் ஜிம் ஜோன்ஸ் என்­ப­வரின் ஆல­யத்தில் இடம்­பெற்ற கொலை மற்றும் தற்­கொலை நிகழ்வு களில் 270 குழந்­தைகள் உட்­பட 918 பேர் இறந்­தனர்.


1987 : லண்­டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொட­ருந்து நிலை­யத்தில் இடம்­பெற்ற தீயில் 31 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1993: தென்­னா­பி­ரிக்­காவில் கறுப்­பி­னத்த வர்­க­ளுக்கு வாக்­கு­ரி­மை­ய­ளிக்கும்
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு 21 அர­சியல் கட்­சிகள் அங்­கீ­காரம் அளித்­தன.


2003: அமெ­ரிக்­காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்
துக்கு தடைவிதிப்பது அரசியலமைப்பு க்கு முரணானது என மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமெரிக்காவில் முதல் தடவையாக மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டது.

Post a Comment

0 Comments