கடலை மா- 500 g
பட்டர்-3 மேசை கரண்டி
பேகிங் பவுடர்- 1 1/2 தேக்கரண்டி
அப்பச்சோடா - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் சின்னமிளகாய் கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி இலை தக்காளி -
(சிறிதாக நறுக்கியது -1 கப்)
இறைச்சி அல்லது கோழி அவித்து அரைத்தது- 200 g
இடித்த மிளகு துாள் -1தேக்கரண்டி
துண்டு மிளகாய் துாள் -1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை-
1) முதலில் இறைச்சியை உப்பு புளி பட அவித்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
2)கடலை மாவுடன் முட்டை பட்டர் பேகிங் பவுடர் அப்பச்சோடா கலந்து 1 கப் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக பிசைந்து 1 1/2 மணி நேரம் வைக்கவும்.
3)பின்னர் இந்தக் கலவையில் சிறிதாக நறுக்கி வைத்திருந்த மரக்கறி அரைத்த இறைச்சி மிளகுத்துாள் துண்டு மிளகாய் துாள் கலந்து தண்ணீர் ஊற்றி கொஞ்சம் கிறீமியாக பிசைந்து கொள்ளவும்.
4)கடைசியாக கரண்டியால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்யில் ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
மாலை நேர ஆகாரத்திற்கு உகந்த சுவையான இந்த சமையலை நீங்களும் செய்து ருசி பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன்.


0 Comments