பொதுநலவாய
நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள அங்கத்துவ
நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும்
அதிதிகளுக்கான விசேட இராப்போசன விருந்துபசாரம் நேற்று வெள்ளிக் கிழமை
நடைபெற்றது.
பொதுநலவாய அமைப்பின் தலைவியான பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்
சார்பில் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், கமீலா பாக்கர் தம்பதியர் இந்த
இராப்போசன விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இராப்போசன விருந்து
கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றமை
குறிப்படத்தக்கது.
0 Comments