இது குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் 20.6 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களில் நாணயக்
குற்றிகள் பயன்பாட்டுக்காக 15 கோடியே 74 இலட்சத்து 45 ஆயிரத்து 382
பத்து ரூபா நாணயக் குற்றிகளும் 60 கோடி 43 இலட்சத்து 67 ஆயிரத்து 758
ஐந்து ரூபாய் நாணயக் குற்றிகளும் 50 கோடி 33 இலட்சத்து 68 ஆயிரத்து 315
இரண்டு ரூபாய் நாணயக்குற்றிகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
அத்துடன், 71 கோடியே 13 இலட்சத்து 34 ஆயிரத்து 933 ஒரு ரூபாய்
நாணயக்குற்றிகளும் 37 கோடி 14 இலட்சத்து 22 ஆயிரத்து 434 ஐம்பது சத
நாணயக் குற்றிகளும் மக்களின் பாவனைக்காக புழக்கத்தில்
விடப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்நாணயக்குற்றிகளை மக்கள் பயன்படுத்தாது சேமித்து
வருகின்றனர். இதனால் நாணயக்குற்றிகளை பாவனைக்கு பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்திற்கொண்டு தங்களிடமுள்ள நாணயக்குற்றிகளை பயன்படுத்துமாறு அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
0 Comments