
சனிக்கிழமை பிரித்தானிய பிரதமர் மாநாடு முடிவடைந்த பின்னர், பத்திரிகையாளரை சந்தித்துள்ளார். பத்திரிகையாளர் மாநாடு என்று சொன்னதும் பல ஊடகவியலாளர்கள் இருப்பார்கள் என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. மிகவும் குறைந்த அளவான பத்திரிகையாளரை மட்டுமே இலங்கை அரசு வேண்டும் என்றே அனுமதித்தது. அத்துடன் கேள்வி கேட்க்கும் உரிமை, ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டும் இருந்தது. இது கமரூனை மேலும் கோபப்படுத்தும் செயலாக அமைந்துவிட்டது. அங்கே உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர் மாத்திரமாக ஒரு விடையத்தை கூறியுள்ளார். காத்திரமான விடையம் என்று தமிழர்கள் சொன்னாலும் அது இலங்கையை பொறுத்தவரை அணுகுண்டுதான் !
அது என்னவென்றால் மார்ச் மாதத்திற்கு முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உலகிற்கு காண்பிக்கவேண்டும். இல்லை என்றால் நாம் சர்வதேச விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டி இருக்கும் ! அவ்வளவுதான். கமரூன் பேசிய இப் பேச்சால், இலங்கை அதிபர் மகிந்தர் உட்பட பலர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். தமிழர்களைப் பொறுத்தவரை சிட்-அன் வாச்(sit and watch) என்று சொல்லுவார்களே அதனை தான் நாம் தற்போது செய்யவேண்டி உள்ளது. நிதானமாக இருந்து நடப்பதை அவதானிக்கவேண்டியது தான். பிரதமர் தாமே இக் காலக்கெடுவை விதித்துள்ளார்.
தாம் கூறியது போல அவர் நடந்துகொள்வாரா ? இல்லை என்றால் அவர் கூறியதை செய்யச் சொல்லி நாம் அழுத்தத்தை கொடுக்க அவரே ஒரு வாய்ப்பை திறந்துவிட்டுள்ளார்.அரிதான இந்த வீடியோஇணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்.
0 Comments