மிகப்
பிரகாசமான வால் நட்சத்திரத்தை இன்று (20) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி
வரை வெற்றுக் கண்களால் பார்க்கும் அவகாசம் இலங்கை மக்களுக்குக் கிடைக்க
இருப்பதாக தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு
தெரிவித்தது.
நூற்றாண்டின் வால்நட்சத்திரம் (comet of the century) எனஅழைக்கப்படும் இந்த வால்நட்சத்திரம் இந்த வருடத்தில் தென்படவுள்ளது.
இந்த
வால்நட்சத்திரம் சூரியனை மெல்ல மெல்ல நெருங்கி வருவதாக அறிவித்துள்ள
அமைச்சு , எதிர்வரும் 28 ஆம் திகதி ஆகும் போது அது சூரியனுக்கு மிக
நெருக்கமாகச் செல்லும் என அறிவித்துள்ளது.
கிழக்கு
வானில் அதிகாலை 5.00 மணி அளவில் இதனைக் காண வாய்ப்பு இருப்பதாக
அறிவிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டே இந்த வால்நட்சத்திரம் முதன் முதலில்
கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்குஅய்ஸன் (ISON) எனப் பெயரிடப்பட்டது.
வால்நட்சத்திரம் தென்படுகையில் சூரியன் உதயமாகியிருந்தால் வெற்றுக் கண்களினால் அதனைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ் வால்நட்சத்திரம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு (ஆங்கிலம்) கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்
0 Comments