Subscribe Us

இந்தியரும் பாகிஸ்தானியரும் சப்பாத்திக்காக குவைத்தில் சண்டை

இந்தியாவும் பாகிஸ்தானும் பல்வேறு விடயங்களுக்காக மோதிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவரும் பாகிஸ்தானியர் ஒருவரும் சப்பாத்திக்காக சண்டையிட்ட சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது.



இச்சம்பவம் குவைத்தின் பஹஹீல் நகரிலுள்ள ஒரு ரெஸ்டுரண்டில் இடம்பெற்றுள்ளது.
 
இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகையில், இந்தியரும் பாகிஸ்தானியரும் சப்பாத்தி வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளனர்.

 இதன்போது பாகிஸ்தானியருக்கு சப்பாத்தி வழங்கும் போது இந்தியர் முந்தியடித்து அச்சப்பாத்தியை எடுத்துள்ளார். இதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகினர் என நேரில் கண்ட
ஒருவர் கூறியுள்ளார்.

 இச்சம்பவத்தின் போது பாதுகாப்பு அதிகாரி அவசர வைத்திய உதவியாளர்களுடன் சம்பவ  இடத்திற்கு விரைந்து இருவரையும் மீட்டுள்ளார்.

 ரெஸ்டுரன்ட் ஊழியர் சப்பாத்தியை தனக்கே வழங்கியதாக இந்தியர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments