போன உயிர் மீண்டும் வருவதில்லை என்பதே மனிதர்களிடையே பரவலாக காணப்படும்
அதுபோலவே மரித்த பின்னரும் உயிர்பெற வைக்கும் தொழில்நுட்பம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்பதும் சிலரது நம்பிக்கையாகவுள்ளது. அந்த நம்பிக்கையில் இறந்த பின்னர் தங்களது உடலை பாதுகாப்பதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு இறந்த உடல்களை பாதுகாக்க நிறுவனங்களும் உண்டு. அங்கு இறந்த உடல்களை பழுதடையாது பாதுகாத்து வைக்கப்படும்.
*எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது?*
அதுபோலவே மரித்த பின்னரும் உயிர்பெற வைக்கும் தொழில்நுட்பம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்பதும் சிலரது நம்பிக்கையாகவுள்ளது. அந்த நம்பிக்கையில் இறந்த பின்னர் தங்களது உடலை பாதுகாப்பதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு இறந்த உடல்களை பாதுகாக்க நிறுவனங்களும் உண்டு. அங்கு இறந்த உடல்களை பழுதடையாது பாதுகாத்து வைக்கப்படும்.
*எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது?*
நம்பிக்கை. எனவே நாமும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம். இறப்புக்கு பின்னரான வாழ்க்கை என்பது நம்பிக்கை சார்ந்த விடயமாகவே உள்ளது.
ஒருவர் இறந்துவிட்டார் என்பதை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த நிறுவனம் உடலிலுள்ள இரத்தத்தினை 'பம்' செய்வதற்கு முயற்சிப்பர். உடலில் பல்வேறு இரசாயன பதார்த்தங்களை செலுத்தி மூளை பழுதடைவதையும் இரத்தம் உறையாமலும் பாதுகாக்கப்படும்.
பின்னர் உடலானது நீர் குளி ரடையும் வெப்பநிலையை அடைந்ததும் குளிரில் உடல் பாதுகாப்பதற்குரிய நிலையை அடைந்துவிடும். இதன்போது உடலிலுள்ள இரத்தம் நீக்கப்படும். பின்னர் -130 செல்ஸியஸில் குளிராக்கப்பட்டு கொள்கலனின் உடல் வைக்கப்பட்டு –196 செல்ஸியல் குளிர் நிலையிலுள்ள நைதரசன் தாங்கியில் பேணப்படும்.
தற்போது அமெரிக்காவில் இப்படி சுமார் 150 உடல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் 80 உடல்களின் தலை அல்லது மூளை மட்டுமே பாதுகாக்கப்பட்டள்ளது. எவ்வாறெனினும் தற்போது உயிருடன் உள்ளவர்களில் 1000ற்கும் அதிகமானோர் தங்களது உடலை பாதுகாக்க குறித்து நிறுவனங்களை பணித்துள்ளனர்.
*இத்திட்டம் வெற்றிபெறலாம் என ஏன் நம்புகின்றனர்?*
இத்திட்டத்தில் ஆர்வமிக்கவர்கள் இது தொடர்பில் கூறுகையில், இத்திட்டம்
வெற்றியளிக்க வாய்ப்புள்ளமைக்கு 3 காரணங்கள் கூறுகின்றனர். முதலாவது உடல் பாதுகாக்கப்படும் போது ஒட்சிசனின் மட்டத்தினை பேணி மூளை சிதைவடைவது குறைக்கப்படுகின்றது.
இரண்டாவதாக தேவையான அளவில் குறைந்த வெப்பநிலையில் (குளிரில்) உடல் பேணப்படுவதால் கலங்கள் மற்றும் இழையங்கள் தரமிழக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.
மூன்றாவதாக குளிராக்கல் முறையிலிருந்து முற்றாக உடலை
பாதுகாக்கமுடியாவிட்டாலும் விரைவில் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் இதற்கும் தீர்வு கிடைக்குமென நம்புகின்றனர்.
*விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ள பிரச்சினைகள்*
பாதுகாக்கமுடியாவிட்டாலும் விரைவில் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் இதற்கும் தீர்வு கிடைக்குமென நம்புகின்றனர்.
*விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ள பிரச்சினைகள்*
–5 செல்ஸியஸ் வெப்பநிலையில் நீரில் உடல் பாதுகாக்கப்படும் போது கலங்கள் குளிரில் உறைந்து ஐஸ் கட்டிகளாக மாறிவிடும். இவை நீரின் அடர்த்தியை விடக் குறைந்தது. இதனால் அதிகளவில் பிரிகையடைந்து கல மென்சவ்வுகள் கடுமையாக பாதிப்படையும்.
ஆனால், குளிராக்கல் முறையில் அவ்வாறில்லை எனத் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவற்றிற்கான ஆதாரம் எதுவுமில்லை என வொஷிங்டன் பல்கலைக்கழக குளிரில் கலம் மற்றும் இழையங்களை பாதுகாக்கும் தொழில்நுட்ப நிபுணர் கலாநிதி டயங்கோ கஓ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், குளிராக்குதலில் சிறிய பூச்சிகள் மற்றும் இலகுவான இழையங்களை பாதுகாக்கலாம். ஏனெனில் அவை அளவில் சிறியவை என்பதால் கையாள்வது இலகுவானது. ஆனால் எவ்வாறு உடல்களை பாதுகாப்பது எனத் தெரியவில்லை என்றார்.
உடலிலுள்ள பாகங்களை பாதுகாக்க முடியும். ஆனால் அவற்றினை மொத்த உடலாக பாதுகாப்பது கடினம். ஏனெனில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது.
சாதாரணமாக மூளையை பாதுகாக்க வேண்டுமென்றால் அதிலுள்ள 12 பிரிவுகளையும் வெவ்வேறு நிலைகளில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
*உயிர் திரும்பக் கிடைக்குமா?*
வளரும் தொழில்நுட்பத்தினால் எதிர்காலத்தில் உடல்களை சிறப்பாக பாதுகாக்க முடிந்தாலும் வயதாதல் மற்றும் நோய்களினால் கலங்கள் பாதிப்புக்குள்ளாகும். நரம்புகள் தொடர்பான சிக்கல்கள், கலங்களிலுள்ள புரத இழப்பு என இன்னும் ஏராளமான சவால்கள் உண்டு. அவற்றுக்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது.
எனவே குளிராக்கல் முறையை மேம்படுத்தி உடலை பதப்படுத்தினாலும் தற்போதைக்கு இறந்த உடலுக்கு உயிரை வழங்குவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுகளும் விஞ்ஞானிகளிடம் இதுவரையில் இல்லை என்றே சொல்லலாம்.
இதேவேளை எதிர்காலத்தில் அவை நடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உடலை பாதுகாக்க தயாராகிவிட்டாலும் எந்தவொரு விஞ்ஞானிகள் அமைப்பும் குளிராக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என கலாநிதி கஓ தெரிவித்துள்ளார்.
அதேபோல குளிராக்கல் பதப்படுத்தல் முறையினை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இந்த உடல்களுக்கு எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எப்போதும் வளாந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது.




0 Comments