நியூஸிலாந்து அணியுடனான இருபது-–20
தொடருக்கான இலங்கை அணியிலிருந்து திமுத் கருணாரத்ன, ரங்கன ஹேரத்
மற்றும் அஷன் பிரியஞ்சன் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து
அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபது–-20
தொடரின் முதலாவது போட்டி இன்று பல்லேகலயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கைக் குழாம்
அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமால் தலைமையில்
அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணியில் நடைபெற்று முடிந்த
நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த திமுத்
கருணாரத்ன, ரங்கன ஹேரத், அஷன் பிரியஞ்சன் ஆகிய மூவருக்கும் வாய்ப்பு
வழங்கப்படவில்லை.
அதேவேளை, றமித் றம்புக்வெல்ல, சீக்குகே பிரசன்ன ஆகியோர்
இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக இருவரும்
சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே
இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது.
இதனிடையே அண்மைக்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட
தொடர்களில் இலங்கை அணி தனது சிரேஷ்ட வீரர்களுக்கு சுழற்சி
அடிப்படையில் ஓய்வினை வழங்கி வந்த போதிலும், குமார் சங்கக்கார, மஹேல
ஜெயவர்தன, திலகரட்ண டில்ஷான் ஆகிய மூவரும் இக்குழாமில் இடம்
பிடித்துள்ளனர்.
தினேஷ் சந்திமால், குமார் சங்கக்கார, லசித் மலிங்க, மஹேல ஜெயவர்தன,
திலகரட்ண டில்ஷான், குசால் ஜனித் பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு
திரிமன்ன, சசித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ், சீக்குகே பிரசன்ன, றமித்
றம்புக்வெல்ல, சுரங்க லக்மால், திஸர பெரேரா, நுவான் குலசேகர.
0 Comments