Subscribe Us

1200 வருடம் பழமைவாய்ந்த குர்ஆன் பிரதி கண்டெடுக்கப்பட்டது

(PX Online)
 
சுமார் 1200 வருடம் பழமைவாய்ந்த கையினால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதியொன்றும் தஃப்ஸீர் (குர்ஆன் வியாக்கியாணம்) நூல்களும் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொழுகை விரப்பில் பொதி செய்யப்பட்ட நிலையில், துருக்கி நாட்டின் வடமேற்கு மாநிலத்தின் பொட்ரம் (Bodrum) நகரில் அமைந்துள்ள 1737 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்ட டெபெசிக் பள்ளிவாசலின் அடித்தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. “இதுவொரு சாதாரண குர்ஆன் பிரதி என நினைத்து அதற்கொரு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கவில்லை” எனக் கூறும் மேற்படி பள்ளிவாசலின் இமாம் Yuksel Kilicaslan தொடர்ந்தும் கூறும் போது, “எனினும் இந்தக் கையெழுத்துக் குர்ஆன் பிரதியில் காணப்பட்ட சில தடயங்கள், 1200 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என்பதை எனக்கு உணர்த்தியது” எனவும் கூறினார்.

  1200 வருடம் பழமைவாய்ந்த குர்ஆன் பிரதி

புதைபொருள் ஆய்வாளர்களின் நீண்ட பரிசோதனைகளின் பின்னர், ஆயிரம் ஆண்டுகளை விட பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. Bodrum Underwater Archaeology Museum நூதனசாலைக்கு வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்ட இக் குர்ஆன் பிரதி, மேலதிக பராமரிப்புகளுக்காக இஸ்மிர் (İzmir) நகரில் உள்ள கையெழுத்துப் பிரதி நூலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
 குர்ஆன் பிரதியின் பழைமையை உறுதிப்படுத்துவதற்காக பரிசோதிக்கப்படும் போது

இன்று வரை கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப் பழமைவாய்ந்த குர்ஆன் (கையெழுத்துப்) பிரதி, மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) ஆட்சிக் காலத்தில் தொகுப்பட்ட பிரதி, ரஷ்யா நாட்டின் தாஷ்கந்த் நூதனசாலையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) காலத்தின் குர்ஆன் பிரதி (பாதுகாப்புப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது)

Post a Comment

0 Comments