தேசிய இளைஞர் சேவை மன்றம் கல்பிட்டி பிரதேச செயலக இளைஞர் சம்மேளனத்திற்க்கான நிர்வாக உறுப்பினர் தெரிவு கல்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2023.10.14 அன்று இடம் பெற்றது.
இன் நிர்வாக தெரிவில் கல்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 31 இளைஞர் கழக நிர்வாகதினறும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதன் அடிப்படையில் கல்பிட்டி இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பதவிக்காக முசல்பிட்டி கிராம சேவகர் பிரிவின் இளைஞர் மன்ற தலைவர் ஹிஜாஸ் அவர்களும், கல்பிட்டி மண்டலகுடா Power surge இளைஞர் கழகத்தின் தலைவர் சஜான் அவர்களும் போட்டியிட்டனர்.
அதன் அடிப்படையில் ஹிஜாஸ் 18 அவர்கள் வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கல்பிட்டி மண்டலகுடா Power surge இளைஞர் கழகத்தின் தலைவர் சஜான் அவர்கள் 70 வாக்குகளும் பெற்றனர்.
அதன் அடிப்படையில் சஜான் 53 வாக்கு வித்தியாசதில் வெற்றி பெற்று 2023 ஆண்டுக்கான தேசிய இளைஞர் மன்ற தலைவர் ஆனார்.
சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் துடிப்பான இளைஞரான சகோதர் சஜான் 2023 ஆண்டுக்கான தேசிய இளைஞர் மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் அவருக்கு எமது ஊர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
-Rizvi Hussain-
0 Comments