பொருளாதார
நெருக்கடி, விலைவாசிகள் உயர்வு, வாழ்க்கைச் செலாவனி அதிகரிப்பு,
அத்தியாவசிய உணவு மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள இந்த
கால கட்டத்தில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விலை கூடிய (150- 250
ரூபாய்) குளிர்பானங்களை தவிர்த்து தினமும் விரயமாகும் தேங்காய் நீரை ஒரு
ஆரோக்கிய பானமாக பருக முடியும்.
நகர்ப் புறங்களில் தேங்காய் துருவி
விற்கும் கடைகளில் தேங்காய்களை உடைத்து நீரை வீசி விடுகிறார்கள் அவற்றை
தூய்மையான வாளிகளில் பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் பாதசாரிகள்
சிற்றூழியர்கள் மாணவர்கள் பருகும் தாக சாந்தியடையும் ஏற்பாடுகளை செய்து
வைக்கலாம், அது மிகச்சிறந்த தர்மமாகவும் இருக்கும்.
இன்று காலை ஒரு
ஏழைத் தாய் தனது சிறிய மகனுடன் ஒரு தேங்காய் விற்கும் நிலையத்தில் 'தம்பி,
தேங்காய் நீர் பருகத் தர முடியுமா?' என்று வாய் உலர்ந்த நிலை காட்டி
கேட்பதனை அவதானித்தேன், தூய்மையற்ற ஒரு வாளி நிறைய தேங்காய் நீர்
வீசுவதற்காக வைக்கப் பட்டிருந்தது, அது தாய்மையானதல்ல என்று கூறிய
விற்பனையாளர் உடைக்கத் தயாராக இருந்த ஒரு தேங்காய் நீரை ஷொப்பிங் பேக்
ஒன்றில் வார்த்து வழங்கியதை கண்ட பின்னர் தான் நீண்ட நாள் மனதில் கருந்த
இந்தப் பதிவை எழுதத் தீர்மானித்தேன்!
தேங்காய் தண்ணீரின் நன்மைகள்: (திரட்டிய சில தகவல்கள்)
நம்
உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சிறுநீர் பாதை தொற்றுக்கள், ஈறு
நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமலை
உண்டாக்கும் வைரஸ்களை அழித்தும் வெளியேற்றும்.
தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து உடல் வறட்சி அடையாது.
தேங்காய்
நீர் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி.அமினோ அமிலங்கள், என்சைம்கள்,
பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம்,
பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற
கனிமங்களைக் கொண்டிருக்கும்.
தேங்காய் நீர் பசி உணர்வை
கட்டுப்படுத்தும் எனவே இதை எவ்வளவு குடித்தாலும் நம் உடலில் கொழுப்புகள்
மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும்.
செரிமான பிரச்சனை
உள்ளவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் நீரை குடித்து வந்தால் செரிமானக்
கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லைகள் வராது.
தைராய்டு பிரச்சனை
உள்ளவர்கள் தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றல்
மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு
சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
உயர் ரத்த அழுத்தம்
பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலையில் தேங்காய் நீர் குடித்து வந்தால், அது
உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
சைட்டோக்கின்ஸ்
மற்றும் லாரிக் அமிலம் ஆகிய இரண்டிற்கும் வயது மூப்பை தடுக்கும் குணங்கள்
உள்ளது. இவை சருமத்தின் pH நிலையை சமன் செய்கிறது.
தேங்காய் நீரில் சைட்டோக்கின்ஸ் மற்றும் லாரிக் அமிலம் அதிக அளவில் இருக்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது.
தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
கர்ப்பிணிகள்
தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு
ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரிபோஃப்ளேவின்,
ஃபைடோஜெனிக் அமிலம் , தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன
அழுத்தத்தை குறைக்கும். இந்த முக்கிய வைட்டமின்களால் தேங்காய் நீர் நமது
மனநிலையை உடனடியாக மாற்றும்.
0 Comments