அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, சற்று முன்னர் கட்டாரில் வசிக்கின்ற ஒரு நண்பர் எனக்கு ஒரு தகவலை அனுப்பி இருந்தார்...
அந்த தகவலின் படி தற்பொழுது இலங்கையில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஏதோ ஒரு விசாவில் அதிகமான இளைஞர்கள், அரச தொழில்களில் விடுமுறை பெற்றவர்கள் அதுவும் குறிப்பாக உலமாக்கள், உஸ்தாது மார்கள் அங்கு தொழில் தேடி வந்திருக்கின்றார்கள், அவர்களில் பெரும்பாலானோர் பிஃரீ விசா என்று சொல்லப்படுகின்ற சில கம்பெனிகளால் விற்கப்படுகின்ற விசாக்களை பெற்றுக் கொண்டு தற்காலிகமாக அங்கே சென்று வேறொரு தொழிலை தேடிக்கொண்டு மாறுவதற்காக அவர்கள் புறப்பட்டு செல்கிறார்கள்..
அதற்காக அவர்கள் சுமாராக 6 அல்லது 7 லட்சம் ரூபாய்களை செலவு செய்து அங்கு சென்று நண்பர்களது அறிமுகமானவர்களது தயவிலே தங்கி இருக்கின்றார்கள்.
குறிப்பாக இந்த FIFA உலக கால் பந்து தொடருக்கு பிறகு தற்காலிகமாக தாம் பெற்றிருந்த வேலை வாய்ப்புகளை கூட பலர் இழந்திருக்கின்ற நிலைமையிலே புதிதாகவும் தொழில் தேடி அங்கு நூற்றுக் கணக்கானவர்கள் சென்று தொழில் இல்லாமல் அவர்களது அன்றாட செலவினங்களையும் கவனித்துக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுவதை பற்றி அவர் எமக்கு கவலையுடன் அறிய தந்திருக்கின்றார்.
எனவே அங்கு செல்லுகின்ற யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு தொழில் தகைமைவுடன் அங்கு செல்ல வேண்டும், தொழிற்சந்தை நிலவரங்களை அறியாமல் ஏதாவது ஒரு விசாவை வாங்கிக் கொண்டு அங்கு செல்வது தற்போதைய நிலைமையில் அறிவுடைமையாகாது என்றும் இந்த செய்தியை பலருக்கும் அறிய தருமாறும் வேண்டிக் கொண்டிருக்கின்றார்.
சில உலமாக்கள் அங்கு சென்றிருக்கிறார்கள் அவர்கள் மதரஸாக்களிலே பாடம் போதிக்க கூடியவர்களாக அல்லது வயது மூத்த ஆலிம்களாக கதீபுகளாக இமாம்களாக இருந்தவர்கள் அவர்கள் கூட இவ்வாறான விசாக்களில் வந்திருக்கின்றார்கள்...
அவர்களுக்கு அரபு மொழி தெரியும் என்ற ஒரே காரணத்தினால் இங்கு அவர்களுக்கு தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது இலகுவான காரியம் அல்ல ஏனென்றால் அந்த அரபு கலாபீடங்களிலே தாம் கற்கின்ற பாரம்பரிய அரபு மொழியோ பிரயோகங்களோ தற்பொழுது இந்த நவீன தொழிற்சந்தையிலே பெரிதாக எடுபடுகின்ற ஒரு நிலைமையில் இல்லை..
அதேபோன்று, இப்பொழுது இந்த தொழில் சந்தையிலே அரபு தெரிந்த ஒரே காரணத்தினால் மாத்திரம் அவர்களுக்கு தொழில் வழங்கவும் மாட்டார்கள், அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கின்ற தொழில் நிபுணத்துவம், தகைமை அத்தாட்சி படுத்தப்பட்ட சான்றிதழ்கள் அவர்களிடம் இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாத பலர் இங்கு வந்து மிகவும் சிறிய தொழில்களை சிற்றூழியர்களாக வேலை செய்கின்ற நிலைமையும் இருக்கின்றது.
அவர்கள் நாடு திரும்ப முடியாமலும் நிர்க்கதி நிலையில் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை செலுத்தி இங்கு வந்திருக்கின்றார்கள், கடன் பட்டு, சொத்துகளை விற்று வந்திருக்கின்றார்கள்.
எனவே தயவு செய்து இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு நாங்கள் அறிந்தவர்களுக்கும் இந்த செய்தியை எத்தி வைக்குமாறு மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றார்.
ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

%20(2500%20%C3%97%201000%20px)%20(2000%20%C3%97%201500%20px)%20(2500%20%C3%97%201500%20px)%20(1).png)
0 Comments