Subscribe Us

header ads

ரொனோல்டா மரியாதை தெரியாதவர் , போதை பாவிக்கிறார் , ஒழுக்கமில்லாத செயல்களிலே ஈடுப்படுகிறார் அதனாலேயே மரியாதை இழந்தார்


 இப்பதிவு இது வரையும் யாருமே எழுதாத ஒரு விடயமே , முற்று முழுதாக எனக்கு தோன்றிய ஒரு ஊகமே !


ஆனால் , ஊகத்தின் பின்னாலே பல காரணங்களும் , அவதானங்களும் உண்டு.

ரொனால்டோவை அவரது அணியினரே புறந்தள்ளிய , வேற்று மனப்பான்மையோடு நடத்திய சம்பவங்கள் , இந்த உலகக்கிண்ண போட்டியிலே நடந்து முடிந்தது.

கௌரவமாக பிரியாவிடை பெற்றிருக்க வேண்டியவர் , வேதனையோடு தனது அணிக்கான போட்டியை முடித்திருக்கிறார்.

ஆனாலும் , தனது நாட்டுக்கான பயணத்தை தொடர்வதாக ட்வீட் செய்துள்ளார் ரொனால்டோ , இது அவரின் நாட்டுப்பற்றும் , பெருந்தன்மையும் எனலாம்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் , பிறிதொரு கோணம்..

ஒரு தலை சிறந்த சாதனை வீரனை , அவரது அணியினரே ஒழுங்காக விளையாட விடாது , சிறந்த பிரியாவிடையும் வழங்காது , பயிற்சியாளர் , முகாமையாளர் , வீரர்கள் வரையிலும் புறக்கணித்துள்ளனர் எனில் , அங்கு தான் யோசிக்க வேண்டிய விடயமொன்று உள்ளது.

ரொனால்டாவுக்கு எதிராக காய் நகர்த்தியதிலே , நீண்டக்கால திட்டமொன்று இருந்திருக்க வேண்டும்.

கோப்பரேட் உலகமும் , அரசியல் சக்திகளும் உளவியல் ரீதியான ஒரு பொறிமுறையை ரொனால்டோவுக்கு எதிராக அரங்கேற்றியிருக்கலாம்.

சர்வதேச அரசியலும் , கோப்பரேட் உலகமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.

இந்த இரட்டையர்களின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் பணிகள் பலவற்றை , கடந்த காலங்களிலே ரொனால்டோ கச்சிதமாகவே அரங்கேற்றியிருந்தார்.

யுனிசெபிலே பங்கெடுத்தமை , நிதி வழங்குகின்றமை தொட்டு , பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குதல் தொட்டு , சியோனிஸங்களின் அட்டகாசங்களுக்கெதிராக குரல் கொடுத்தமை தொட்டு ரொனோல்டோவின் நல்லறங்கள் பல.

கொக்கா கோலாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது , ரொனோல்டாவின் உச்சப்பட்ச தாக்குதல்.

இது எல்லாம் சேர்ந்தே , ரொனோல்டாவை குப்புறத்தள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வழி சமைத்திருக்கலாம்.

இவனை இப்படியே விட்டால் அரசியலில் கோலோச்சுவான் , அழுத்த சக்தியாக மாறுவான் என்பது சர்வதேச அரசியலின் காய் நகர்த்தலாக இருக்கும்.

எங்களுக்கு நஷ்டத்தை உருவாக்குவான் என்பது கோப்பரேட் நிறுவனங்களின் கணக்காக இருக்கும்.

இரு தரப்பும் சேர்ந்து அடித்துள்ளதாகவே எண்ண தோன்றுகிறது.

இந்த Analyse உண்மைப்படுமாக இருந்தால் , ரொனோல்டாவின் அணியுள்ளே இருந்தே இன்னும் சில விடயங்கள் வெளி வரும்.

ரொனோல்டா மரியாதை தெரியாதவர் , போதை பாவிக்கிறார் , ஒழுக்கமில்லாத செயல்களிலே ஈடுப்படுகிறார் போன்ற குற்றச்சாட்டுக்களை , அவரது அணி முகாமைக்குழுவோ , வீரர்களோ தெரிவிப்பார்கள்.

இல்லையேல் , ரொனால்டோ மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையாவது வெளியிடுவார்கள்.

அந்த நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளும் நடக்கலாம்.

இவைகள் நடக்கலாம் , நடக்காதும் போகலாம் என்பது தானே ஊகம்.

அது போல ஒரு பதிவே இது என்பதும் , இந்த ஊகத்திற்கான , பகுப்பாய்வுக்கு பல காரணங்கள் இருக்கிறது என்பதையும் அழுத்தி தெரிவிக்கிறேன்.

விடயம் மலிந்தால் , சந்தைக்கு வரும்...
பொறுத்திருந்து பார்ப்போம்.

✍️

Post a Comment

0 Comments