எரிபொருள் இன்மையால் ரயில் பணியாளர்கள் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 48 அலுவலக தொடருந்துகளில் 28 ரயில்கள் மட்டுமே சேவையில் இயங்குமென தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
எரிபொருள் கோரி திணைக்கள பணியாளர்கள் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று மாலை இடம்பெறவிருந்த அலுவலக ரயில் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
ரயில் திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம்சுமத்தி ரயில் போக்குவரத்து சேவையாளர்களில் சிலர், நேற்று பிற்பகல் முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments