Subscribe Us

header ads

பிரதமருக்கு ஆதாரவான ஆர்பாட்டத்தை அவரே ஏற்பாடு செய்திருக்கின்றார் - தயாசிறி குற்றச்சாட்டு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதவி விலகவேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடுவார் என்ற உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது

இந்த கருத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

   மகிந்த ராஜபக்ச, தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்த கூறியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தயாசிறி குறிப்பிட்டுள்ளார்

பொதுமக்கள் தம்மை பதவி விலகவேண்டாம என்று கூறும்போது, தாம் எவ்வாறு பதவி விலகமுடியும் என்பதை சுட்டிக்காட்டவே மகிந்த இந்த போராட்டத்தை நடத்துமாறு கூறியுள்ளதாக தயாசிறி தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments