Subscribe Us

ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

 


தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் கூடவிருந்த நிலையில், பிரதமர் பதவி விலகியதைத் தொடர்ந்து அமைச்சரவை கலைக்கப்பட்டது.

இதன் காரணமாக பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிப்பது கட்டாயம் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி அல்லது பிரதமருக்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாகவும், அதனை கருத்திற்கொண்டே சபாநாயகர் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதன்படி, புதிய பிரதமர், அமைச்சரவை மற்றும் அவைத்தலைவர் நியமனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் தலைமையில் நாளை (11) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments