ஜனநாயக நடைமுறைக்கு அமையவே அரசாங்கம்
பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"உலகின்
பல நாடுகளில் இப்படி நடப்பதை நாம் பார்த்துள்ளோம். 88 மற்றும் 89
காலகட்டங்களிலும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. எங்களுக்கு
பாராளுமன்றம் தேவையில்லை, ஜனநாயகம் தேவையில்லை என்றனர். இறுதியில் 60,000
இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் நாங்கள் அதை நோக்கி செல்கிறோமா என்றே
நாம் கேட்கிறோம்."
0 Comments