1983 இனக்கலவரம் நடக்கும் சமயம் ரணசிங்க பிரேமதாச அவர்கள் தான் பிரதம மந்திரி...
கலவரம் முடிந்து . நிலைமை வழமைக்கு திரும்பியதும். பலி எல்லாம் ஜனாதிபதி ஜெ ஆர் பக்கம் திரும்புகிறது. ஆனால் ஜெ ஆர் எதற்கும் அசையவில்லை.
இந்த கலவரம் , சிங்கள மக்களை தூண்டிவிடுதல் என்பன பிரேமதாசாவின் ஜனாதிபதி ஆசைகான ராஜதந்திரம் என்றும் சொல்லலாம்.
அந்த வழிமுறை தான் , இன்றைய ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறிமுறையும் கூட , மாற்றம் ஏதும் இல்லை . இடம் மாறி நட்டு வச்சாலும் , தேங்கா மரத்தில் தேங்கா தானே கிடைக்கும் .
அப்டித்தான்.
பிறகு 1987 ம் ஆண்டு இந்தியா, இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது, இந்திய ராணுவத்தை சமாதான படையாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு. ராஜீவும் , ஜெயாரும் ஒப்பந்தமிடுகிறார்கள்.
அன்றைய நாளில் இலங்கை கடற்படையணியை ராஜிவ் காந்தி பார்வையிடும் போது , ஒரு கடற்படை வீரனால் தாக்கப்படுகிறார். ஆபத்தின்றி ராஜிவ் இந்தியா செல்கிறார்.
ஒரு வேலை ராஜீவின் உயிருக்கு ஏதும் நிகழ்ந்திருந்தால் ?இலங்கையின் நிலை என்ன ? ஜனாதிபதி பொறுப்பு வகித்த ஜெயாரின் நிலை தான் என்ன ?
இதெல்லாம் ஜெயாரை குறி வைத்து பின்னப்பட்ட சதி . அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தால் , ஜனாதிபதி பதவி ஜெயாரை கைவிட்டு போகும் , காத்திருந்த கனவு மிக இலகுவாக பிரேமதாசாவிற்கு வந்தடைந்திருக்கும். ஜஸ்ட் மிஸ் !
பிறகு அந்த படை வீரனை மன நலம் பாதிக்க பட்டவர் என்று கூறி, அவரை குறைந்த பட்ச தண்டனையுடன் பின்னாளில் விடுதலை செய்ய படுகிறார்.
அதுமட்டும் இல்லாமல் , பிரேமதாச ஜனாதிபதி பதவி வந்த பிறகு அவருக்கு அரசியல் பதவியும் வழங்கப்படுகிறது.
இது இருக்க , இப்போ மக்கள் வீதிகளுக்கு இறங்கி கோத்தாவை வீட்டுக்கு அனுப்ப போராடுகிறார்கள்.
இதே மக்கள் தான் கோத்தாவின் தேர்தல் காலங்களில் 'ரட்ட அதன விருவா ' பாடலையும் வெளியிட்டார்கள்.
இந்த மூலோபாயங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன தெரியுமா ?
இனக்கலவரம் முடிய , தமிழ் மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதிருந்தனர். குறிப்பாக கொழும்பு பகுதிகளில்.
ஜெயாரின் பதிவகாலம் முடிவை நெருங்குகிறது.
பிரேமதாச தனது காய் நகர்த்தலை துவங்கி விட்டார்.
அநேகமாக 1987 என்றுதான் நினைக்கிறேன், "யாவருக்கும் புகலிடம் 2000" என்கிற பதாகத்தை வெளியிடுகிறார்.
வெளியிடுவது மட்டும் இல்லாமல், ஒரு நாளை நியமித்து காலை 7 மணியளவில் எல்லோரும் வீதிக்கு இறங்கி ஒருவருக்கு ஒருவர் கை கோர்த்து நிற்க வேண்டும். நடந்தது ...
எல்லோரும் வீதியோரம் கைகோர்த்து நின்றோம். இன , மத பேதமனின்றி நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று ஒன்று சேர்த்தார்.
அதற்காக பாடல் ஒன்றும் வெளியிடுகிறார்.
https://www.youtube.com/watch?v=9s3wawTHHkA
அதோடு நின்றுவிடவில்லை , 2000 ம் ஆண்டு பிறக்கும் நேரம் சுபீட்ச நாடக திகழ வேண்டுமனே கனவுகளை விதைத்தார் ...
எப்படி ?
2000 என்று அச்சடிக்கப்பட்ட "செவன " லாட்டரி சீட்டுகளை விநியோகம் செய்து அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கிறார். மாளிகாவத்தை , டயஸ் பிளேஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்.
கம்முதாவை என கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் எல்லாம் நடந்தேறியது.
மனுசன பாராட்டணும் , ஒரு காசு சீனாவிடம் கடன் வாங்கல தெரியுமா ? முதன் முதலில் காசை தானே அச்சடிக்கிரார்.
அப்போ தான் டாலர் கூட ஆரம்பிக்குது.
நம்ம பண வீக்கம் அடைய துவங்குது.
தனக்காக இயங்கும் சண்டியர்களை வளர்த்து விடுகிறார்.
அரச நிலங்களை தாரை வார்த்து வழங்குகிறார்.
பிரேமதாசா ஒரு சகாப்தம் தான் ..
ஒரு விஷயம் இப்போ இருக்குற ஜனாதிபதி தான் , அன்றைய பிரேமதாசாவிற்கு பாதுகாப்பு அதிகாரி. இவர் தன் பாதுகாப்பு கற்கையை வேறு எங்கும் கற்கவில்லை , நம்ம மெட்ராஸில் தான் கத்துக்கிட்டு வருகிறார்.
அப்போ அவர் பிரேமதாசா கிட்ட கத்துகிட்ட மொத்த வித்தையையும் இப்போ இறக்கி இருக்கிறார்.
கர்மா சும்மா இல்லை ... அதான் சஜித்துக்கும் வாரிசு இல்லை .
credits goes to writer
0 Comments