Subscribe Us

அமைச்சரவை அமைச்சுக்கள் சிலவற்றில் மாற்றங்கள் விபரங்கள் உள்ளே

 


அமைச்சரவை அமைச்சுக்கள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எரிசக்தி அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி லெகுகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  

Post a Comment

0 Comments