நோய் அறிகுறிகள் இல்லா நிலையிலும் வழமையை விட சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் அல்லது நடக்கும் பொழுதோ வேலையில் இருக்கும் பொழுதோ அதிக களைப்பு மூச்சு வாங்குதல் கண்கள் நாவு உதடுகள் வெளிறல், சற்று நீல நிறமாக அவை மாறினால் ஆக்சிஜன் அளவு குறைவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் உடனடியாகவே வைத்திய ஆலோசனையை பெறுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக சிறுவர்களுக்கு அவற்றை தெளிவாக சொல்ல முடியாமல் இருக்கலாம் என்றும் அவர்களை கவனமாக அவதானித்துக் கொள்ளுமாறும் வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
எல்லா நிலையிலும் நிதானமாகவும் பதட்டங்கள் வீண் பீதி அச்சங்களின்றியும் தைரியமாக அசாதாரண சூழ்நிலைகளில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இதுவரை நம் நாட்டில் நூற்றுக்கு 2.5% வீதத்தினருக்கே நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது அதிலும் 1.5% தினருக்கே மரணம் நிகழ்ந்திருக்கிறது, அதிலும் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள், ஆரம்ப சிகிச்சைகளை நாடாதவர்கள், தற்போதைய நிலையில் தடுப்பூசி பெறாதவர்களே அதிகம்.
வருமுன் காப்பு நடவடிக்கைகள், போதிய உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, உரிய நேரத்திற்கு சிறந்த உணவு பழக்க வழக்கங்கள், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணங்கள் உள்ள காய்கறிகள் பழங்கள் கீறை வகைகள் பானங்களை அறிந்து அளவோடு உட் கொள்ளல், தொற்றா நோய்களுக்கான முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் என்பவற்றில் கரிசனை கொள்வோம்.
என்றாலும், பரவல் விகிதம் அதிகரித்துச் செல்வதால் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக அனுசரித்து, தடுப்பூசிகளையும் பெற்று புதிய-இயல்புநிலை வாழ்க்கையை நாம் தன்நம்பிக்கையோடும் இறைநம்பிக்கையோடும் முன்கொண்டு செல்ல வேண்டும்!
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நோய் தொற்றிலிருந்து எம்மனைவரையும் பாதுகாப்பானாக, நோய்த் தொற்றுக்கு ஆளாகியவர்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்குவானாக, வபாஃத் ஆகியவர்களுக்கு உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக, அவர்களது இழப்பில் துயருற்றுள்ளவர்களுக்கு அல்லாஹ்வின் கழா கத்ரில் பூரண திருப்தியையும் ஆறுதலையும் தந்தருள்வானாக!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
26.08.2021


0 Comments