தாலிபான்கள் ஒரு phase இலிருந்து இன்னொரு phase க்கு காலடி எடுத்து வைத்த தோற்றப்பாட்டுடன் இறங்கியிருப்பது தேசிய, சர்வதேசத்தில் இவ்வாரம் சூடு பிடித்துள்ளது. ஒருசிலர் இவர்களை உமர் ரலி யாகவும், ஒரு சிலர் அபூ ஜஹ்லாகவும் சித்தரித்து பல கம்புசுத்தல்களை பேஸ்புக் இல் காண முடிகின்றது.
வெளிநாடு செல்லும் விமானத்தில் ஓடி ஏறும் அக்காட்சியை வைத்து, "பாருங்கள் தாலிபான்கள் எவ்வளவு கொடூரர்கள்" என காட்ட முயற்சிப்பவர்களில் அதிகமானோர், "கட்டுநாயக்கவில் விசா இல்லாமல் அமெரிக்கா போக சந்தர்ப்பமாம், விமானம் வந்திருக்காம்" என்றால், இதை விட வேகமாக ஓடுவார்கள். நாடும், நாமும் அந்த நிலையில்தான் உள்ளோம்.
அதேவேளை, தாலிபான்களை இறைநேசர்களாக காட்ட முயற்சிப்பவர்கள், மதத்தின் பெயரால் அவர்கள் கடந்த காலத்தில் செய்த நாசகார, கொடூர செயல்களையும், அதனால் இஸ்லாத்துக்கு ஏற்பட்ட அவப்பையர்களையும் சற்று மீட்டிப்பார்க்க வேண்டும்.
எனினும், அவர்களின் முதல் phase ஆட்சியானது சர்வதேச ரீதியாக எந்த அங்கீகாரமுமற்றதாக இருந்தது. ஆனால் இன்றைய 2nd phase ஆட்சியை சில பலமான நாடுகள் அங்கீகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. முக்கியமாக சீனா.
எனவே அமெரிக்க-சீன வல்லாதிக்க போரில் தாலிபான்கள் இனி ஒரு பந்து. இப்போதுதான் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பந்தாட்டத்துக்குள் உள் நுழைந்திருக்கிறார்கள். தாலிபான்களின் இத்திடீர் மாற்றம் உண்மையானதா, அல்லது பிற வல்லாதிக்க நாடுகளின் நாடகமா என்பதை நாம் இப்போதே முடிவெடுத்து உமராகவோ, அபூலஹபாகவோ சித்தரிப்பது too early.
அதற்கிடையில், தனது கழற்றி வீசிய scarf களுக்கு நியாயங்கள் தேடிக்கொண்டிருந்த மலாலாவின் மைத்துனிகள், அந்தோ இஸ்லாமிய தீவிரவாதம் என எழுதிக்கொட்டுவதும், ஸஹ்ரானிசத்துக்குள் பதுங்கியிருந்தவர்கள் இதோ இஸ்லாமிய ஆட்சி என பறையடிப்பதையும் காண வேடிக்கையாய் உள்ளது.
2nd phase மூலம் சமூக அங்கீகாரம் பெற்றவர்களுக்கு சிறந்த உதாரணம் நமது நாட்டிலேயே உள்ள JVP யாகும்.
எனவே இத்தாலிபானியர்கள், சமூக அங்கீகாரத்துடன் ஜனநாயக ரீதியில் செல்வார்களா? மீண்டும் அதே கொடூரங்களோடு நாட்டை நாசமாக்குவார்களா? என இப்போதே நாம் முட்டிக்கொள்ள தேவையில்லை, சற்று பொறுந்திருந்து உற்று நோக்குவோம்.
அதுவரை, நாம பிடுங்குவதற்கு நிறைய உள்நாட்டு ஆணிகள் உள்ளன.
ஆதம்பாவா ஜலீல்
17-08-2021


0 Comments