Subscribe Us

header ads

எரிந்த கப்பலால் புற்றுநோய் ஏற்படும் - மக்களுக்கு எச்சரிக்கை!

 


கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் இருந்த இரசாயன பொருட்கள் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அந்த இரசாயன பொருட்கள் தொடர்பில் சரியான தகவல் வழங்கும் வரை அதில் ஏற்பட கூடிய பாதிப்பு தொடர்பில் அறிவிப்பது கடினம் என விஞ்ஞானிகள் தெரிவித்துளளனர்.


கப்பலில் இருந்து வெளியேறியுள்ள பொருட்களால் நீண்ட கால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் டர்னி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக தயவு செய்து அந்த கடல் பகுதிக்கு வருகைத்தர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதிக நச்சுத்தன்மை காரணமாக உடலுக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்த கூடும். அந்த மணல்களை தொடுவதனையும் தவிர்க்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments