இன்று (09-01-2021)கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புதிதாக பதில் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ள அதிகாரிக்கும் கல்பிட்டி அனைத்து மத தலைவர்களுக்குமிடையிலான மத நல்லிணக்க கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கல்பிட்டியில் கால காலமாக பேணப்பட்டு வரும் மத நல்லிணக்கம் தொடர்ந்தும் நல்ல முறையில் பேணப்பட வேண்டும் அதற்காக மதத்தலைவர்கள் சமூகங்களுடையில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாதான முறையில் பேசி பிரச்சினைகளை தீர்க்க பொலிஸாருக்கு உதவி வழங்க வேண்டும் என்றும் அதற்கான முழு ஒத்துழைப்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்ற வகையில் தாமும் வழங்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.
அதேபோல கல்பிட்டியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள்,போதைப்பொருள் பாவனை விற்பனை போன்றவற்றை தடை செய்வதற்கும் மத தலைவர்கள் மதஸ்தாபணங்கள் ஒத்துழைப்பு வழங்கி கல்பிட்டியில் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை பாதுப்பதோடு போதைப்பொருள் அற்ற கல்பிட்டியை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு கொண்டார்.
கல்பிட்டியில் மத நல்லிணக்கத்தை போணுவதற்காக மத தலைவர்களுடன் இணைந்து சேவையாற்ற தாம் தயாராக உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
-Rizvi Hussain-
0 Comments