இலங்கையில் இடம்பெறும் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் உள்ள நியாயத்தை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் சிங்கள சகோதரர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இவை.. அவற்றில்.
* புதைப்பது முஸ்லிம்களின் உரிமை அது வழங்கப்பட வேண்டும்
* நாங்கள் கோட்டாவுக்கு வாக்களித்தது. முஸ்லிம் சடலங்களை எரிப்பதற்கு அல்ல
*ஒரு மீட்டர் இடைவெளியில் பரவாத கொரோனா. ஆறடி ஆழத்தில் புதைத்தால் பரவலாம் என்பது கிளம்பி விடப்பட்டிருக்கும் இனவாதமே.
*தேர்தலை வெல்ல பரப்பிய இனவாதம் இன்று அவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது.
*கோரோனா சடலத்தில் இருந்து தொற்று பரவுமாயின் கொரோனா நோயாளிகளின் மலத்தில் இருந்து பரவாதா??
போன்றதும். இன்னும் பல பதிவுகளையும் காணக்கூடியதாக உள்ளது. பெரும்பான்மையினர் எல்லோரும் இனவாதிகள் அல்ல. உண்மையில் எமது பிரச்சினைகளின் நியாயங்களை சரியாக தெளிவுபடுத்தினால் எமக்காக வாதிடும். நல்ல முன்மாதிரி மனிதர்கள் எல்லா சமூகங்களிலும் நிறைந்து உள்ளனர்.
முபிஸால் அபூபக்கர் 13:11:2020
0 Comments