Subscribe Us

header ads

ஒரே இவன் யூடியப்லாதான் என திட்டும் பெற்றோர் - அதையும் தாண்டி சமூக ஊடகங்கள் மூலம் சாதித்தவர்களின் பட்டியலில் கவ்ரவ் -


தொகுப்பு - முஹம்மத் இன்பாஸ்)


2020ம் ஆண்டில் , 30 வயதுக்குள் சமூக ஊடகங்கள் மூலம் சாதித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது , உலகின் தலைச்சிறந்த வர்த்தக சஞ்சிகையான போர்ப்ப்ஸ் .



இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் கவ்ரவ் என்பவர் இடம்பிடித்துள்ளார் .
,
சில நாட்களுக்கு முன் தான் வாங்கிய , 05 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முன் , தனது அம்மாவோடு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர் , தனது ட்விட்டரில் போட்ட பதிவிலே இப்படி சொல்கிறார் - “பெரிதாக செய்யுங்கள்... சரியாக செய்யுங்கள்... ஸ்டைலாக செய்யுங்கள்... எல்லாவற்றுக்கும் இறைவனுக்கு நன்றி,”

கவ்ரவ் சமூக வலைத்தளத்தில் , அப்படி எதை தான் செய்தார் என்று யோசிக்கிறீர்களா ?

கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி வழியில் பள்ளிக்கல்வியை முடித்த கவுரவ், கோடிங் படிப்பில் ஆர்வம் கொண்டு அதைப் படித்தார். பின்னர் பிட்ஸ் பிலானியில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையிலே முதுகலை பட்டம் பெற்றார்.

ஒரு சாதரண இஞ்சினியரிங் மாணவரான கவுரவ், படிப்பை முடித்ததும் துபாயில் செக்யூரிட்டி இஞ்சினியராக பணியில் சேர்ந்தார்.

இப்படியான நிலையிலே தான் பல இந்திய இளைஞர்கள் 'Youtube' சேனல்கள் தொடங்கி லட்சங்களில் சம்பாதிப்பது போல தானும் சம்பாதிக்க நினைத்தார் கவ்ரவ் .
2012ம் ஆண்டு முதல் 'Youtube' சேனல் தொடங்க திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரின் திட்டம் என்னவோ 2015ல் தான் நிறைவேறியது.

இப்படி தான் ஒரு யூட்யூபாளராக மாறினார் கவுரவ் ,

' Technical Guruji '’ என்ற பெயரில் கவுரவ் தொடங்கிய ஹிந்தி 'Youtube' சேனலுக்கு எடுத்தவுடனே நல்ல வரவேற்பும் கிடைத்தது. வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மொபைல் போன் சந்தையில், புதிதாக வெளிவரும் ஒவ்வொரு மாடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த இந்தியர்களுக்கு, கவுரவின் போன் விமர்சனங்கள் உதவியாகவும் , அதே சமயம் அவர் அதை சுவாரசியமாக தொகுத்து வழங்குவதும் மிகவும் பிடித்து போனது.

அடுத்து என்ன?

இலட்சக்கணக்கில் குவிந்தனர் பார்வையாளர்கள் , சுமார் 2800க்கும் மேலான வீடியோக்களை பதிவேற்றி குவித்தார் கவுரவ்.

தற்போதைய நிலையிலே 1.7 கோடி சப்ஸ்கிரைப்பர்களுடன், 16 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை இவரின் சேனல் பெற்றுள்ளது.

சந்தை தகவல் அடிப்படையிலே , ஹிந்தி மொழியில் வெளிவரும் உலகத்தின் , மிகப்பெரிய யூட்யூப் சேனல் ‘Technical Guruji’. எனப்படுகிறது , இதனாலேயே கவுரவும் கோடீஸ்வரர் ஆகத் தொடங்கினார்.

‘டெக் குரு’ என்று அழைக்கப்படும் இவர் , மாதம் 20 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

போர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30 பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது யூட்யூபர் இவர் ஆவார் .
தற்போது துபாயில் வசித்து வரும் கவுரவ், தனது 'Youtube' வருமானத்தின் மூலமே , நாம் மேலே கூறிய ஆடம்பரக் காரான ரோல்ஸ் ராய்ஸ் காரினை வாங்கியுள்ளார் .

தகவல் மூலம் - பிஸ்னஸ் இன்சைடர்.

Post a Comment

0 Comments