Subscribe Us

கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்ப ஆட்டம் - இன்று 14 பேருக்கு தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் இன்றைய தினம் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் அனைவரும், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 639 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 1,981 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments