Subscribe Us

மக்களே!!!! அனைத்து குடும்பங்களுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - சஜித் அறிவிப்பு


யார் எப்படியான விமர்சனங்களை முன்வைத்தாலும் தமது அரசாங்கத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பன்னலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வரை சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரில் இருந்து அன்றாடம் சம்பளம்பெறும் நபர்கள் என அனைவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

எனது இந்த யோசனை தொடர்பாக தற்போது புதுமையான கூட்டணி ஒன்று ஒன்றிணைந்து சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க போவதாக கூறும் போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட எனது தந்தை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் மதிய உணவை வழங்கினார். தந்தைக்கு முடியுமாயின் மகனுக்கும் முடியும்.

அதேவேளை நாட்டில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்திடம் எந்த பொருளாதார திட்டங்களும் இல்லை. பொருளாதார நிபுணர்கள் எனக் கூறிக்கொள்வோர் ஊடக கண்காட்சியை நடத்துகின்றனர். தினமும் ஊடக செய்தி தலைப்புகளில் மாத்திரம் பெரிதாக தோன்றுகின்றனர் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments