சவுதி உள்துறை அமைச்சகம் புனித ஹஜ் யாத்திரைக்காக இராஜ்ஜியத்தை சில
பகுதிகளில் நுழைவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்து அறிவித்துள்ளது.
விதிகளை மீறி அப்பகுதிகளுக்குள் நுழையும் எவருக்கும் 10000 சவுதி ரியால்
வரை அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான முக்கியமான தகவல்களையும்
தடைசெய்யப்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை உள்துறை அமைச்சகம்
வெளியிட்டுள்ளது.
நூதன கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு
நடவடிக்கைகளுக்கான விதிகள் மற்றும் அவற்றை மீறுவதற்கான அபராதங்களை
அமல்படுத்துவதற்காகவும், இந்த ஆண்டு (1441AH) ஹஜ்ஜுடைய காலத்தில் கொரோனா
வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் (நெறிமுறைகள்) கடைபிடிக்கப்படுவதை உறுதி
செய்வதற்காகவும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புனித நகரங்களுக்குள் நுழைபவர்களுக்கு 10000 சவுதி ரியால் அபராதம் – உள்துறை அமைச்சகம்
புனித இடங்களான (மினா, முஜ்தலிஃபா, அராபத்) ஆகிய பகுதிகளில் பொது மக்கள்
நுழைவதைத் தடுக்கும் வகையில், 11/28/1441 AH தேதி முதல் துல்-ஹஜ்ஜின் பிறை
பன்னிரண்டாம் நாள் முடியும் வரை, தக்க அனுமதி இல்லாமல் இந்த
பகுதிகளுக்குள் நுழைபவர்களுக்கு (10,000) பத்தாயிரம் சவுதி ரியால்கள்
அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறி மீண்டும் அப்பகுதிகளுக்குள்
நுழைந்தால், அபராதம் இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புனித யாத்திரைக்கான விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என
அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களையும் சவுதி அரசாங்கம்
கேட்டுக்கொண்டுள்ளது. அதே சமயம், விதி மீறல்களை தடுக்கவும்,
குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் புனித பகுதிகளுக்குள் நுழைவதை
தடுப்பதற்கும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவும், சாலை
பாதுகாப்பு காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும், பாதைகளிலும் தீவிர
சோதனைகளில் ஈடுபடுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: Xpressriyadh.com
0 Comments